1:13 PM 0 Comments


பேய்களுக்கு கால்கள் உண்டா இல்லையா.?

சித்தர்கள் தத்துவப் படி மனித உடல் என்பது அன்னமயகோசம்,பிராணமயகோசம்,ஞானமய கோசம்,என்று மூன்று வகைப்படும் கண்ணுக்கு தெரியும் ஸ்தூல சரீரம் அன்னமயமானது அதாவது சதை,எலும்பு,ரத்தம் சம்பந்தப் பட்டது பிராணமயமென்றால் சூட்சம். கண்ணுக்கு தெரியாத உயிர் சம்பந்தப் பட்டது ஞானமயமென்றால் எண்ணங்கள் கர்மாக்கள் சம்பந்தப் பட்டது இதுவும் கண்ணுக்கு தெரியாத சரீரமாகும் உயிர் பிரிந்த பிறகு அன்னமய கோசம் அழிந்து விடுவிறது மற்ற இரண்டும் தான் ஒன்றோடு ஒன்று பிரியாமல் பித்துரு லோகத்தில் வாசம் செய்கிறது
சித்தர்கள் தத்துவப் படி மனித உடல் என்பது அன்னமயகோசம், பிராணமயகோசம், ஞானமய கோசம், என்று மூன்று வகைப்படும் கண்ணுக்கு தெரியும் ஸ்தூல சரீரம் அன்னமயமானது அதாவது சதை, எலும்பு, ரத்தம் சம்பந்தப் பட்டது பிராணமயமென்றால் சூட்சம். கண்ணுக்கு தெரியாத உயிர் சம்பந்தப் பட்டது
ஞானமயமென்றால் எண்ணங்கள் கர்மாக்கள் சம்பந்தப் பட்டது இதுவும் கண்ணுக்கு தெரியாத சரீரமாகும் உயிர் பிரிந்த பிறகு அன்னமய கோசம் அழிந்து விடுவிறது மற்ற இரண்டும் தான் ஒன்றோடு ஒன்று பிரியாமல் பித்துரு லோகத்தில் வாசம் செய்கிறது
இதையே ஆவி என்றும் பேய் என்றும் அழைக்கிறார்கள் ஆவி வடிவம் என்றாலே அது நகர்ந்து செல்ல உறுப்புகளை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை அவர்கள் நினைத்தப் படி நினைத்த இடத்திற்கு நிமிட நேரத்தில் நகர்ந்தே செல்லலாம் அதாவது காற்று போல
அதனால் ஆவிகள் தாங்கள் நடமாட கால்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை ஆனாலும் பலர் நினைக்கிறப் படி ஆவிகளுக்கு கால்கள் இல்லாமலில்லை கால்கள் உண்டு தான் வாழ்ந்த போது பெற்றிருந்த சரீரத்தின் சாயலிலேயே பல ஆவிகள் நடமாடுவதாக அமானுஷ்ய ஆய்வுகள் சொல்கின்றன
எனவே பேய்களுக்கு கால் உண்டு பேய்களை நம்பாதவர்களுக்கு இந்த கேள்வியும் பதிலும் வேடிக்கையாக தோன்றும் நாம் அதைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை...

0 comments:

1:03 PM 0 Comments


‘ஏலியன்’ மெய்யாக வாழும் கோள் 2013-இல் கண்டுபிடிக்கப்படும்

 1995-இல் ‘51 பெகாசி பி’ எனப்படும் புறக்கோளைக் கண்டுபிடித்தனர். இதுவே முதன் முதலில் கண்டறியப்பட்ட சூரியன் போன்றதொரு விண்மீனைச் சுற்றி வரும் புறக்கோள் ஆகும். இதன் விண்மீன் 51 பெகாசி (51 Pegasi) என்று அழைக்கப்படுகின்றது. ஆனால் 1992-இல் PSR B1257+12 எனும் துடிப்பலை நொதுமி விண்மீனைச் சுற்றி வரும் புறக்கோள்களே முதன் முதலில் கண்டறியப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

அன்றிலிருந்து இற்றைவரைக்கும் 854 புறக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் உயிரினம் வசிக்கக்கூடியன என்று இனம் காணப்பட்டவை கிட்டத்தட்ட 36 கோள்கள் ஆகும். இவற்றுள் இவ்வாண்டில் செப்டம்பர், நவம்பர் மாதங்களில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கோள்களும் அடங்கும். எனவே எதிர்வரும் 2013இல் புதிதாகவோ அல்லது ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட உயிரின வாழ்தகமை உள்ள கோள்களைப் பற்றிய ஆய்வுகளில், திட்டவட்டமாக உயிரினம் வசிக்கின்றது என்று கருதப்படும் கோளைப் பற்றிய அறிக்கை வெளிவரும் என்பதே மென்டேசு (Mendez) மற்றும் மாசி (Geoff Marcy) ஆகியோரின் கூற்றாகும்.

சில விண்மீன் குடும்பத்தில் உயிரின வாழ்தகமை வலையம் (Habitable zone ) எனும் பிரதேசம் உள்ளது எனக் கருதப்படுகின்றது. இது உயிரினங்கள் வாழக் கூடிய கோள்கள் காணப்படலாம் எனக் கருதப்படும்
கெப்லர்-22பி விண்வெளிப் பகுதியாகும். விண்மீனின் வெப்ப ஒளிர்வு இதில் முக்கியமானது. எமது சூரியனுடன் ஒப்பிடுகையில் வெப்பமாகவோ அன்றி குளிர்மையாகவோ விண்மீன்கள் காணப்படலாம். இவ் வலையங்களில் உள்ள கோள்களில் சரியான வளி அமுக்கத்துடனும் திரவ நிலையிலுள்ள நீரும் இதில் அனுமானிக்கப்படும். புவியானது சூரியனின் வாழ்தகமைப் பிரதேசத்தில் காணப்படும் கோள் என்பதால் இதனில் உயிரினங்கள் வாழும் தகமை உள்ளது. இக் கோட்பாடு உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலை உடைய அண்டவெளிக் கோள்களைக் கண்டுபிடிக்க உதவுகின்றது.

0 comments:

8:56 AM 0 Comments


Skype-ன் மூலம் பரவும் புத்தம் புதிய வைரஸ்

கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை பரப்பி விடும் Hackers, தற்போது Skype Program-ன் புதிய வசதி மூலம் வைரசை பரப்பி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Skype-ன் Message-ல் “lol is this your new profile pic?” என்ற செய்தி வந்து, அதனை நீங்கள் கிளிக் செய்வதன் மூலம் வைரஸ் உங்கள் கணனிக்குள் புகுந்து விடுகிறது.
இதன் மூலம் Hackers, குறித்த கணனியை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க முடியும்.
இது குறித்து ஆய்வாளர்கள், தாங்கள் இந்த வைரசின் தாக்கம் குறித்து அறிந்திருப்பதாகவும், விரைவில் இதற்கான தீர்வு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் சமீபத்தில் வெளியான புதிய Skype பதிப்பை பயன்படுத்துமாறும் பயனாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

0 comments:

8:52 AM 0 Comments


முன்று மைல் விட்டமுள்ள விண்கல் ஓன்று பூமியை நெருங்குகிறது!


உலக அழிவைப் பற்றி எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் இது ஒரு அதிர்ச்சி தரும் செய்தி தான். ஆனால் ஒன்றும் பயம் கொள்ள வேண்டியதில்லை. இந்தக் கல் இந்திய நேரப்படி நாளை மாலை உலகை அதன் பாதையில் மிக நெருங்குகிறது.
மிக நெருங்குகிறது என்றால் சுமார் 4.3 மில்லியன் மைல் தூரத்தில் உலகைக் கடக்கிறது. இது கடந்து போவதைப் பார்க்க விரும்பினால் http://www.slooh.com.என்ற இணையத்தளத்தின் ஊடாகப் பார்க்க முடியும்.
இது கடந்து போனதை வெர்ச்சுவல்டெலஸ்கோப் ப்ராஜெக்ட் வேப்காஸ்ட் மூலம் விண்வெளி விஞ்ஞானிகளின் விளக்கஉரையுடன் வியாழக்கிழமை ஒளிபரப்ப இருக்கிறது. அதனை நீங்கள்http://www.virtualtelescope.eu/webtv/ என்ற இணையத்தளத்தின் ஊடாகப் பார்க்க முடியும்

0 comments:

8:48 AM 0 Comments


தியேட்டர்கள் எதிர்ப்புக்கெல்லாம் நான் கவலை பட மாட்டேன் நினைத்ததை செய்வேன்:மீசைய முறுக்கும் கமல்...

kamal
தியேட்டர்கள் எதிர்ப்பு குறித்து கவலையில்லை. திட்டமிட்டபடி ஜனவரி 10-ம் தேதி இரவு 9.30 மணிக்கு டிடிஎச்சில் விஸ்வரூபம் வெளியாகும் என கமல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ரூ 95 கோடி செலவில் கமல் உருவாக்கியுள்ள விஸ்வரூபம் படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 11-ம் தேதி வருகிறது. இப்படம் வெளியாவதற்கு ஒருநாள் முன்னதாக டி.டி.எச்.சில் ஒளிபரப்பப்படும் என கமல் அறிவித்திருந்தார். இதற்கு திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். டி.டி.எச்.சில் ஒளிபரப்பினால் தியேட்டர்களில் ‘விஸ்வரூபம்’ படத்தை திரையிடமாட்டோம் என எச்சரித்தனர். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து திரையரங்க உரிமையாளர்களும் இந்த விஷயத்தில் ஒரே அணியாக உள்ளனர். இந்நிலையில், விஸ்வரூபம் படம் வரும் ஜனவரி 10-ந் தேதி டி.டி.எச்.சில் ஒளிபரப்பாகிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இன்று கமல் வெளியிட்டார். இன்று சென்னை ஜி.ஆர்.டி. ஹோட்டலில் நடைபெற்ற ‘விஸ்வரூபம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற கமல், “யார் எதிர்ப்பு குறித்தும் கவலையில்லை. எதிர்ப்பவர்கள் பின்னர் என் நிலையைப் புரிந்துகொள்வார்கள். 5 டிடிஎச் நிறுவனங்கள்… திட்டமிட்டபடி விஸ்வரூபம் வரும் ஜனவரி 10-ந் தேதி இரவு 9.30 மணிக்கு இந்தியா முழுவதும் டி.டி.எச்.சில் வெளியிடப்படுகிறது. சன் டைரக்ட், டிஷ் டிவி, ஏர்டெல், வீடியோகான், ரிலையன்ஸ் ஆகிய டி.டி.எச்.களில் 155-வது சேனலில் இப்படத்தை கண்டுகளிக்கலாம். இதற்கு முன்பணமாக ரூ.1000 செலுத்த வேண்டும்,”என்றார்.

0 comments:

7:30 AM 0 Comments

inem


உலகம் அழியாததன் காரணத்தை விளக்கும் புதிய மாயன் கலண்டார்!

உலகம் அழியும் என்று மாயன் கலண்டர் பற்றிய பீதியுடன் உலகமே அச்சத்தில் ஆழ்ந்தது.
ஆனால் இப்போது பல வருடங்களாக ஆய்வாளர்கள் தேடிக்கொண்டு இருந்த மாயன் கலண்டரின் அடுத்த பகுதி தொன்னமெரிக்காவின் வேறொரு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பழைய கலண்டரின் தொடர்ச்சியாக அது அமைந்ததே அதிசயமான ஒன்று அதே நேரத்தில் உலகம் அழியாமல் போனதுக்கு இப்போது தான் சரியான காரணம் கிடைத்துள்ளது.
இந்தக்கலண்டரில் 2032 ம் வருடத்தில் மார்ச் மாதம் 16ம் திகதிக்குப் பின் தொடர்ச்சியாக 21 நாட்கள் இடைவெளி விடப்பட்டுள்ளனவாம்.
இந்த காலகட்டத்தில்தான் டுபிரு என்ற வால்நட்சத்திரம் புமிக்கு மிக அருகில் வரும் என்று அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அதே நேரத்தில் சூரியன், வியாழன் போன்றவையும் பூமியுடன் நேர் கோட்டில் இருக்கும். அதனால் ஏற்படும் கடுமையான ஈர்ப்பு விசையின் காரணமாக பூமியின் சுழற்ச்சி வோகம் தடைப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஒரு வேளை அப்படி நடக்கமானால் உலகம் அழிவு நிச்சயம் நடக்தேறலாம்.ஆனால் அப்படி நடக்கும் போது பலர் தப்பிப் பிழைப்பதற்க்கும் வாய்ப்பு உண்டு என சொல்லப்படுகிறது.
அதனாலேயே மாயன் கலண்டரில் 21 நாட்கள் இடைவெளிக்குப் பின் மறுபடியும் கலண்டர் தொடர்கிறதாம் உலகம் அழியும் என்று மாயன் கலண்டர் பற்றிய பீதியுடன் உலகமே அச்சத்தில் ஆழ்ந்தது.
ஆனால் இப்போது பல வருடங்களாக ஆய்வாளர்கள் தேடிக்கொண்டு இருந்த மாயன் கலண்டரின் அடுத்த பகுதி தொன்னமெரிக்காவின் வேறொரு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பழைய கலண்டரின் தொடர்ச்சியாக அது அமைந்ததே அதிசயமான ஒன்று அதே நேரத்தில் உலகம் அழியாமல் போனதுக்கு இப்போது தான் சரியான காரணம் கிடைத்துள்ளது.
இந்தக்கலண்டரில் 2032 ம் வருடத்தில் மார்ச் மாதம் 16ம் திகதிக்குப் பின் தொடர்ச்சியாக 21 நாட்கள் இடைவெளி விடப்பட்டுள்ளனவாம்.
இந்த காலகட்டத்தில்தான் டுபிரு என்ற வால்நட்சத்திரம் புமிக்கு மிக அருகில் வரும் என்று அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
அதே நேரத்தில் சூரியன், வியாழன் போன்றவையும் பூமியுடன் நேர் கோட்டில் இருக்கும். அதனால் ஏற்படும் கடுமையான ஈர்ப்பு விசையின் காரணமாக பூமியின் சுழற்ச்சி வோகம் தடைப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஒரு வேளை அப்படி நடக்கமானால் உலகம் அழிவு நிச்சயம் நடக்தேறலாம்.ஆனால் அப்படி நடக்கும் போது பலர் தப்பிப் பிழைப்பதற்க்கும் வாய்ப்பு உண்டு என சொல்லப்படுகிறது.
அதனாலேயே மாயன் கலண்டரில் 21 நாட்கள் இடைவெளிக்குப் பின் மறுபடியும் கலண்டர் தொடர்கிறதாம்

0 comments:

12:11 PM 0 Comments


மொனிட்டரில் பிரச்சனையா????


அவசரமாக பணியாற்றிக் கொண்டிருக்கையில் கணணி சரியாக இயங்கினாலும் மொனிட்டர் பிரச்னை செய்தால் பொறுமையிழந்து பதட்டம் ஏற்படும்.
மற்ற துணை சாதனங்களில் பழுது ஏற்பட்டால் அவற்றிற்குப் பதிலாக
இன்னொரு சாதனத்தைப் புதிதாகவோ அல்லது கடனாகவோ பெற்று அப்போதைக்கு நம் கணணி பணியை முடிக்கலாம்.
மவுஸ், கீ போர்டு, ஸ்பீக்கர், ஏன் சிடி மற்றும் பிளாப்பி டிரைவ் கூட உபரியாக வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம் அல்லது பழைய கணணியில் இருந்து கழட்டி வைத்ததைக் கொண்டு இயங்கலாம். ஆனால் மொனிட்டரில் பிரச்னை ஏற்ட்டால் அது இயலாது, உபரியாக ஒன்று வைத்துக் கொள்ளவும் முடியாது.
மற்றவரிடமிருந்து இரவல் வாங்குவதிலும் சிக்கல் ஏற்படும். எனவே மொனிட்டரில் பிரச்ச‌னை ஏற்பட்டால் அதனைப் பொறுமையாக, என்ன பிரச்னை என அலசிப் பார்ப்பதே சிறந்தது. அதற்கான சில வழிகளை இங்கு பார்ப்போம்.
உங்கள் கணணி நன்றாக இயங்கி மொனிட்டரில் எந்த சிக்னலும் வரவில்லை என்றால் கீழ்க்கண்டபடி அதனை ஆய்வு செய்யவும். ஆனால் அதில் எங்கு பிரச்னை என்று உங்களுக்குச் சரியாகத் தெரியும் என்றால் நேராக அதனைச் சரி செய்திடும் வழிக்கே சென்று விடலாம்.

0 comments:

12:08 PM 0 Comments


Blue Screen Error – சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று


விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திரை’ என்று தமிழ்ப் படுத்தலாம் .
இந்த கட்டுரை , மரித்த நீலத்திரையில் சில வகை வாசகங்கள் தோன்றினால் , அந்த எரர்களை சரி செய்யும் வழிமுறைகளை பற்றியது .
முதலில் உங்களிடம் எக்ஸ்பி சிடி இருக்க வேண்டும் . இந்த கட்டுரை , உங்கள் டிரைவுகள் ‘என் டி எப் எஸ்’ ரக பார்மேட்டை கொண்டிருக்கும் என்ற தோரனையில் எழுதப்பட்டது . உங்களுடையது பேட் 32 ரகமாக இருப்பின் , சில வழிமுறைகள் மிச்சமாகும்.
முதலில் உங்கள் எரர் கீழ்கண்ட சொற்களை உடையதாக இருப்பின் , இந்த வழிமுறை கண்டிப்பாக வேலை செய்யும் . ஒரு வேலை எரர் மெஸேஜை படிக்க முடியாமல் வேகமாக ரீஸ்டார்ட் ஆனாலும் நீங்கள் இவ்வழிமுறையை முயற்சித்து பார்க்கலாம் .

0 comments:

12:07 PM 0 Comments


கூகுளின் நெக்சஸ் 7 டேப்லெட்..


கூகுள் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் புதிய நெக்சஸ் 7 டேப்லெட்டை அறிமுகம் செய்து வைத்தது. இந்திய ஆன்ட்ராய்டு ரசிகர்கள் இந்த டேப்லெட்டுக்காகத் தவமிருந்து காத்துக் கொண்டிருக்கின்றனர். காரணம் இந்த டேப்லெட் குறைந்த விலையில் அதாவது ரூ.11,200க்கு விற்பனைக்கு வருகிறது.
இந்த சாதனம் முதலில் ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தைக்கு வருவதாக இருந்தது. ஆனால் அது செப்டம்பர் அல்லது அக்டோபரில் வரும் என்று ஆசஸ் அறிவித்தது. தற்போது இந்த நெக்சஸ் டேப்லெட் கண்டிப்பாக நவம்பர் மாதத்திற்கு முன் இந்திய சந்தைக்கு வந்துவிடும் என்று ஒரு நம்பகமான தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
இந்த டேப்லெட் என்விடியா டேக்ரா 3 ப்ராசஸர் மற்றும் ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் வர இருக்கிறது. இந்தியாவில் இந்த நெக்சஸ் டேப்லெட் வெற்றி பெறும் என்று நம்பலாம்.

0 comments:

12:38 PM 0 Comments


பென் டிரைவ்களின் தரத்தை சோதிக்க இலவச மென்பொருள் ChkFlsh


USB கருவிகளான பென் டிரைவ், மெமரி கார்டு போன்றவை இன்றைய கணிணியுலகத்தில் தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ள அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இவை குறிப்பிட்ட காலம் செயல்பட்ட பின் தானாகவே இயக்கத்தை நிறுத்திக் கொள்கின்றன. பென் டிரைவ்களும் தற்போது போலியாக 32 GB என்றெல்லாம் சொல்லி விற்கப்படுகிறது. சிலருக்கோ தாங்கள் வாங்கிய பென் டிரைவ் தரமானதா அல்லது போலியானதா என்று கண்டறியத் தெரியாது. அதே போல தற்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பென் டிரைவ் பழுதாயிருக்கிறதா என்றும் கண்டுபிடிக்க முடியாது. 

பென் டிரைவ் மற்றும் ஏனைய USB கருவிகளின் தரத்தைச் சோதிக்க ChkFlsh என்ற இலவச மென்பொருள் இணையத்தில் கிடைக்கிறது. இதன் மூலம் Read Speed, Write Speed, Sector wise Errors போன்ற விசயங்களை சோதித்து அறியலாம். இதனால் நமது பென் டிரைவ் தரமாக உள்ளதா என்றும் தெரிந்து கொள்ளலாம்.

பென் டிரைவை எப்படி சோதிப்பது?

இந்த மென்பொருளைத் தரவிறக்கி ChkFlsh என்ற கோப்பை கிளிக் செய்யவும். பின்னர் உங்கள் பென் டிரைவை கணிணியில் செருகவும். பென் டிரைவில் உள்ள தகவல்களை அழித்து விட்டு சோதிக்கப் பயன்படுத்துவது நலமானது. இதில் 3 வகையான Access Type கள் இருக்கின்றன.

Use Temporary file என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் Write and Read சோதனையைச் செய்ய முடியும். உங்கள் பென் டிரைவில் ஏதேனும் தகவல்கள் இருந்து Read Test மட்டுமே மேற்கொள்ள வேண்டும் எனில் As Logical Driveஎன்பதைக் கிளிக் செய்து கொள்ளவும். Test Length – இதில் One Full Cycle என்பதைத் தேர்வு செய்யவும். பின்னர் Start கொடுத்தால் பென் டிரைவ் சோதிக்கப்படும்.
ஒவ்வொரு பைல் செக்டார்களாக (File Sector) களாக சோதிக்கப்பட்டு வரும். இறுதியில் ஒவ்வொரு செக்டாரும் பச்சை வண்ணத்தில் காண்பிக்கப்பட்டால் உங்கள் பென் டிரைவ் நலமாக இருக்கிறது என்று அர்த்தம். இதோடு பென் டிரைவின் வேகம் மற்றும் பிழைகள் இருந்தால் காண்பிக்கப்படும்.

தரவிறக்கச்சுட்டி : http://mikelab.kiev.ua/PROGRAMS/ChkFlsh.zip



0 comments:

7:15 PM 0 Comments


100 ஆண்டுகளில் வேற்று கிரகத்திற்கு பயணம் செய்யலாம் விஞ்ஞானிகள் தகவல்!!


இன்னும் 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பூமியில் இருந்து பயணம் செய்ய முடியும். அதற்கான முயற்சியை அமெரிக்க ராணுவ விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர்.

விண்வெளி மனிதர்கள் போன்ற வாயேஜர் ஆய்வு கலத்தை அனுப்பினால் வேற்று கிரகத்தை சென்றடைய 70 ஆயிரம் ஆண்டுகள் ஆகும். வாயேஜர் மணிக்கு 38 ஆயிரம் மைல் வேகத்தில் செல்லக் கூடியது ஆகும்.

சூரியக் குடும்பத்தில் பூமியைத் தவிர இதர நட்சத்திரங்கள், கிரகங்கள் மனிதர்கள் வாழக்கூயதாக இல்லை. எனவே அயல் கிரகத்தை சென்றடைய விரும்பினால் அல்பா சென்டவுரி என்ற நட்சத்திரமே நமக்கு அருகாமையில் உள்ளது. எனவே நாம் செல்ல விரும்பக் கூடிய கிரகமாகவும் உள்ளது.

அயல் கிரகத்திற்கு செல்லும் திட்டம் 100 வருட நட்சத்திரக் கப்பல் என அழைக்கப்டுகிறது. இந்த திட்டம் குறித்து இன்னும் 12 வாரங்களில் முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.

0 comments:

7:14 PM 0 Comments


மிரட்டுகிறது சூரியப் புயல்: மின்கிரிட், செயற்கைக்கோள்களுக்கு ஆபத்து வருமா!!


சூரியனில் உருவாகியுள்ள புயல், பூமியின் காந்த களத்தை தாக்கியுள்ளது. இதனால், மின் தொகுப்பை இணைத்து வழங்கும் கிரிட், செயற்கைக்கோள் இயக்கம், விமானப் போக்குவரத்து பாதை ஆகியவை பாதிக்கப்படலாம் என, விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

சூரியனின் மேல்மட்டத்தில் எழுந்துள்ள அதிர்வலைகள் அல்லது சூரியப் புயல், நேற்று பூமியின் காந்த களத்தை தாக்கியது. இவை புழுதிப் புயல் போல பிரமாண்டமான தோற்றத்துடன் பூமியை நோக்கி அதிவேகமாக வந்தது.

 சூரியனின் மேற்புறத்தில் பல்வேறு வேதியியல் மாற்றங்களால், சூரியக் கதிர்கள் பெருமளவில் கொந்தளித்து காணப்படுகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத வகையில் சூரியனின் மேற்புறம் சமீப காலமாக சீற்றத்துடன் உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி, ஒரு சூரியப் புயல் பூமியைத் தாக்கியது. சூரிய காந்த புயல் மூன்று விதத்தில் நிகழும். முதலில் மின்காந்தத் தூண்டல் கதிர்வீச்சும், இரண்டாவதாக, புரோட்டான்கள் நிறைந்த அதிர்வலையால் கதிர்வீச்சும், மூன்றாவதாக, சூரியனின் கரோனா என்ற மேற்புறத்தில் இருந்து எழும் பிளாஸ்மா கதிர்வீச்சும் அடுத்தடுத்து பூமியை நோக்கி வரும்.

நேற்று தாக்கிய சூரியப் புயல் மிகப் பெரியது எனக் கூறப்படுகிறது. இரு பிரமாண்டமான, "சோப் குமிழி' போன்ற தோற்றத்துடன் தாக்கியதாக, அமெரிக்காவின் "நாசா' விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்தப் புயல் சிதறல்கள் மணிக்கு, நான்கு கோடி மைல் வேகத்தில் பயணித்ததாக தெரிவித்தனர்.

இதனால், விமானப் போக்குவரத்து, செயற்கைக்கோள் செயல்பாடுகள், மின் தொகுப்புகள் ஆகியவை பாதிக்கப்படலாம் என, விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக செயற்கைக்கோள் செயல்பாட்டில் அதிக மின் அழுத்த பாதிப்பு இதனால் ஏற்பட வாய்ப்பு உண்டு.

அதே போல, மின்சாரம் கடத்தும் பெரிய அளவிலான கிரிட் மீது, மற்றொரு அதிக சக்தி மின்சாரம் தாக்கும் போது இந்த கிரிட் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதே போல, "குளோபல் பொசிஷன் சர்வீஸ்' என்ற தகவல் தொடர்பில் அதி நவீன சேவையும் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது.

இந்த சூரியப் புயல் இன்று மாலை வரை நீடிக்கும். சூரியப் புயல், பூமியின் வடதுருவத்தில் தான் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

0 comments:

7:12 PM 0 Comments


உங்கள் கணனியின் முகவரியினை யாரும் கண்டுபிடிக்காமல் மறைக்க வேண்டுமா!!

வீட்டுக்கு ஒர் விலாசம் போல கணனிகளுக்கும் முகவரியுண்டு அதுவே IP Addresa ஆகும். நீங்கள் எந்தவொரு இணையத்தளத்தினை பார்வையிட சென்றாலும் உங்களது முகவரி சேமிக்கப்படும். IP முகவரியினைக் கொண்டு உங்கள் கணனியின் விபரங்கள் தொட்டு உங்கள் விபரங்கள் வரை அனைத்தையும் கண்டிறிய வாய்ப்புண்டு.

 மற்றும் IP முகவரியினைக் கொண்டு Hackers கைவுரிசையைக் காட்டக் கூடும். எனவே பாதுகாப்பான இணைய பாவனைக்கு எமது ip முகவுரியினை மறைத்து வைத்திருப்பது. ஓர் சிறந்த முறையாகும்சூ.

ip முகவுரியினை மறைப்பதற்கான மென்பொருள் பதிவிறக்க தரப்பட்டுள்ளது. அதனை பதிவிறக்கி பின்வரும் படிமுறைகளினை பின்பற்றவும்.(குறிப்பு: இவ் மென்பொரளிளை சில Anti Virusகள் தடைசெய்யும்)

Auto Hide IP v5.1.2.6 மென்பொரளினை இன்ரோல் செய்யுங்கள்.
இன்ரோல் முடிந்தபின் அதனை ரன் செய்ய வேண்டாம்.
பின்னர் கிரக் “AutoHideIP.exe” என்பதைனை கொப்பி செய்து. “C:\Program Files\AutoHideIP\”  இங்கு சென்று AutoHideIP.exe என்பதனை Overwrite செய்யுங்கள்.
அவ்வளவுதான்.
பாதுகாப்பான இணைய பாவனைக்கு எமது வாழ்த்துக்கங்ள்.

AutoHideIP மென்பொரளினை பதிவிறக்கிக் கொள்ள : இங்கே கிளிக் செய்யவும்.

0 comments:

6:56 PM 0 Comments

பயர்பாக்ஸ் உலாவியின் பயன்கள்!!

இணையத்தில் பேஸ்புக் போன்ற தளங்களில் நாம் உலாவும் பொழுது அவற்றில் உள்ள படங்களின் Thumbnail மிகச் சிறியதாக இருப்பதால் அவற்றை தெளிவாக நம்மால் காண இயலுவதில்லை.

இது போன்ற தளங்களில் உள்ள சிறு படங்களை முழுமையாக காண உதவும் நெருப்புநரிக்கான நீட்சி Thumbnail-Zoom மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
Add to Firefox பொத்தானை அழுத்தி உங்கள் நெருப்புநரி உலாவியில் பதிந்து கொள்ளுங்கள். அதன் பின் Status bar இல் இதற்கான ஐகான் தோன்றியிருப்பதை கவனிக்கலாம்.

இந்த நீட்சி Facebook மட்டுமின்றி Twittter, Picassa, Flickr, Wikipedia போன்ற பல தளங்களில் பயனுள்ளதாக இருக்கிறது.
இது போன்ற தளங்களில் உலாவும் பொழுது குறிப்பிட்ட Thumbnail மீது மவுசை கொண்டு செல்கையில் அந்த படங்கள் பெரிதாகவும் தெளிவாகவும் நமக்கு காண கிடைக்கிறது.

0 comments:

6:46 PM 0 Comments



சிறார்களின் இணையப்பாவனை​யை கண்காணிக்க சிறந்த மென்பொருள்


இன்று கல்விபயிலும் சிறார்களின் மிக முக்கியமான பொக்கிஷமாக திகழ்வது இணையம் ஆகும். எனினும் சிறுவர்கள்


இணையத்தளங்களை பாவிக்கும் போது தவறான வழிகளில் செல்வதற்கான சாத்தியங்களும் காணப்படுகின்றன. எனவே இவற்றைக் கண்காணித்து சரியான முறையில் வழிநடத்துவதற்கு பல மென்பொருட்கள் காணப்படுகின்றன.


அவற்றுள் இந்த ஆண்டு வெளியான Max Keylogger எனும் மென்பொருளானது பல விசேட அம்சங்களை கொண்டதாக காணப்படுகின்றது.


Max Keylogger அம்சங்களாவன,


1. அழுத்தப்படும் ஒவ்வொரு Keyஐயும் துல்லியமாக பதிவு செய்தல்.


2. கணணியினுள் உள்நுழைந்த தருணத்திலிருந்து வெளியேறும் வரையான தொழிற்பாடுகளை பதிவு செய்தல்.


3. பேஸ்புக், கூகுள் டோக், யாகூ மெசன்சர் போன்றவற்றினூடு சட்டில் ஈடுபடுவதை பதிவு செய்தல்.


4. பயன்படுத்தும் மின்னஞ்சல் தொடர்பான முழுமையான தகவல்களை சேமித்தல்.


5. பயன்படுத்தும் இணையத்தளங்கள் தொடர்பான தகவல்களை சேகரித்தல்.


6. தரவிறக்கம் செய்யும் கோப்புக்கள் தொடர்பான பதிவுகளை மேற்கொள்ளல் போன்றனவாகும். 


தரவிறக்க சுட்டி

0 comments:

8:30 AM 0 Comments


நிலம் மற்றும் நீரில் வாழும் புதிய உயிரினம் கண்டுபிடிப்பு

நிலம் மற்றும் நீரில் வாழக்கூடிய ஒரு அறிய வகை உயிரினத்தை இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பல ஆண்டுகளில் ஆராய்ச்சிக்கு பிறகு முதல் முறையாக, நிலத்திலும் நீரிலும் வாழும் கால்களற்ற உயிரினத்தை கண்டுபிடித்துள்ளதாக, இந்த ஆய்வுக் குழுவுக்கு தலமையேற்றிருந்த டில்லி பல்கலைகழகத்தின் சுற்றுச்சூழல் கல்விக்கான மையத்தின் பேராசிரியர் டாக்டர் எஸ் டி பிஜு தெரிவித்துள்ளார்.

வாலில்லாத இந்த உயிரினங்களின் உட்புற மற்றும் வெளிப்புறத் தோற்றங்கள், செஸிலியன் குடும்பத்தைச் சேர்ந்தவை போன்று தோற்றமளிக்கின்றன. ஒன்பது வகையான கால்களற்ற வேறு நில-நீர் வாழ் உயிரினங்களுடன் ஒப்பிட்டே, இவை முற்றிலும் புதியவை என்று தாங்கள் கண்டறிந்ததாக அந்த ஆய்வுக் குழுவினர் கூறியுள்ளனர்.

மரபணுச் சோதனைகளும் இவை முற்றிலும் புதிய உயிரினங்களே என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. இந்த உயிரினங்களை முதல் முறையாக பார்க்கும் போது இவை புழுக்களை போன்றே தோன்றும், அவை காடுகளிலுள்ள ஈரப்பதம் மிக்க மணற்பரப்புகளில் வாழ்பவை.

செஸிலியன்கள் மிகவும் இரகசியமான ஒரு வாழ்க்கை முறையை கொண்டு ஈரமான மணற்பரப்புக்கு கீழே வாழ்பவை என்பதால் அவற்றை கண்டுபிடிப்பது பெரும் சவாலான ஒரு செயல் என டாக்டர் பிஜு தெரிவித்துள்ளார்.

முதுகெலும்புடன் கூடிய ஒரு புதிய உயிரினக் குடும்பத்தை கண்டுபிடிப்பது என்பது மிகவும் அரியது என்று கூறும் விஞ்ஞானிகள், உலகின் 61 நில நீர் வாழ் உயிரினக் குடும்பங்களில் பெரும்பாலானவை 19 ஆம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியிலேயே கண்டறியப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த உயிரினம் நிலத்துக்கு கீழே கூடு கட்டி, அதில் முட்டையிட்டு, அதை தனது உடலால் சுற்று வளைத்து இரண்டிலிருந்து மூன்று மாதங்கள் வரை அடை காக்கும். அவை புழுவாக உருபெறாமல் நேரடியாக சிறு குஞ்சுகளாகவே வெளிவருவதும் இவற்றின் சிறப்பு என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் வடகிழக்கு காட்டுப்பகுதிகளில் விரைவான மனித குடியேற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், இவ்வகையான உயிரினங்களை காப்பாற்ற வேண்டியது பெரிய சவாலாக இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

0 comments: