Windows கணனியில் Right Click செய்து பெறப்படும் Context Menu இல் 30 இற்கும் மேற்பட்ட வசதிகளை சேர்க்க உதவும் இலவச மென்பொருள்

8:03 AM , 0 Comments

Windows கணணியை பயான்படுத்தும் நாம் Right செய்து பெறப்படும் சாளரத்தினூடாக ஏராளமான செயற்பாடுகளை மேற்கொள்கின்றோம்.

அந்தவகையில் புதியதொரு கோப்பினை உருவாக்குவதற்கு, உருவாக்கப்பட்ட கோப்பு ஒன்றினை  நீக்குவாதற்கு,கணணியை Refresh செய்வதற்கு, கணனி திரையில் இருக்கக்கூடிய Icon களை ஒழுங்குபடுத்துவதற்கு, ஒரு கோப்பு தொடர்பான முழுத் தகவல்களையும் அறிந்து கொள்வதற்கு என ஏராளமான செயற்பாடுகளை நாம் Right Context Menu ஊடாக செய்து கொள்கின்றோம்.

எனவே இதுபோன்ற பயனுள்ள செயற்பாடுகளுக்காக நாம் அடிக்கடி பயன்படுத்தும் Right Context Menu இற்கு மேலும் பெறுமதியை சேர்கின்றது Easy Context Menu எனும் மென்பொருள்

இதன் மூலம் உங்கள் Windows கணணியில் Right Click செய்து பெறப்படும் சாளரத்துக்கு பல பயனுள்ள புதிய வசதிகளை சேர்த்துக்கொள்ள முடியும் அதே நேரம் நீங்கள் உங்கள் கணனி மூலம் மேற்கொள்ளும் செயற்பாடுகளை மிக இலகுவாகவும் விரைவாகவும் செய்து கொள்ள முடியும்.

இலகுவாக தரவிறக்கி பயன்படுத்தக் கூடிய Easy Context Menu எனும் இந்த சிறிய மென்பொருளானது, Right Click Context Menu இல் 30 இற்கும் மேற்பட்ட வசதிகளை சேர்க்க உதவுகின்றது.


நீங்கள் Desktop இல் Right Click செய்யும் போது பெறப்படும் Context Menu இற்கு மட்டுமல்லாது ஒரு கோப்புறையை (Folder)  Right Click செய்யும் போது பெறப்படும் Context Menu, ஒரு கோப்பினை (File) Right Click செய்யும் போது பெறப்படும் Context Menu, Drives context menu, System tools sub menu, Turn off computer sub menu என அனைத்துக்கும் புதுப்புது வசதிகளை சேர்க்க உதவுகின்றது.


இந்த மென்பொருளை நீங்கள் தரவிறக்கி திறந்து கொண்ட பின் நீங்கள் Right Click Context Menu இல் சேர்க்க விரும்பும் அம்சங்களை தெரிவு செய்து Apply Changes என்பதை அலுத்துக அவ்வளவு தான் இனி குறிப்பிட்ட வசதிகள் Right Click Context Menu இல் சேர்க்கப்பட்டிருக்கும்.

அந்தவகையில் கணனியை பயன்படுத்தும் எந்த ஒரு தரப்பினராலும் மிக இலகுவாக பயன்படுத்திக்கொள்ள முடியுமான இந்த மென்பொருளை கணனியில் நிறுவாமல் Portableபதிப்பாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

குறிப்பிட்ட மென்பொருளின் மூலம் Right Click Context Menu இல் நீங்கள்  உருவாக்கிய மாற்றத்தினை நீக்கிக் கொள்ளவும் இதில் வசதி தரப்பட்டுள்ளது. பயன்படுத்திப் பாருங்கள் இதன் பெறுமதி உங்களுக்கே புரியும். இதனை தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.



பதிவு தொடர்பான உங்கள் கருத்துக்கள் சந்தேகங்கள் போன்றவற்றினை தாராளமாக எமக்கு தெரிவியுங்கள்.

நன்றி.

0 comments: