மயாயமான மலேசிய விமானம் குறித்து புதிய தகவல் : கடைசியாக விமானி பேசுவதற்கு முன் விமானம் மேற்கு நோக்கி திருப்பபட்டு உள்ளது...
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற மலேசிய விமானம் கடந்த 8-ந்தேதி திடீரென மாயமானது.
விமானம் மாயமாகி 11 நாட்களாகியும் அது பற்றிய தகவல்கள் தெரியவில்லை. விமானம் கடலில் விழுந்த தா? அல்லது தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதா? என விசாரணை நடந்து வரு கிறது.அமெரிக்கா- இந்தியா உள்பட 26 நாடுகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளன.
இதற்கிடையே மலேசிய உளவுத்துறை மாயமான விமானம் குறித்து 13 கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறது.
* விமானம் தனது கட்டுப்பாட்டில் இருந்து விலகுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு விமானிகள் அறையில் இருந்து மலேசிய விமான கட்டுப்பாட்டு அறையுடன் பேசிய விவரம் வெளியாகி உள்ளது. விமானி அறையில் இருந்து பேசியவர் அனைத்தும் சரியாக உள்ளது. இரவு வணக்கம் (ஆல் ரைட், குட்நைட்) என பேசியுள்ளார். அதன் பிறகு தான் கட்டுப்பாட்டு அறையுடனான விமானத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு 12 நிமிடத்திற்கு முன்னதாகவே விமானம் மேற்கு நோக்கி பயணிப்பதற்கான பாதை கம்யூட்டரில் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், மலேசிய விமானம் தொடர்பில் இருந்து துண்டிக்கப்படுவதற்கு முன்பாக விமானிகள் அறையில் இருந்து, அனைத்தும் சரியாக உள்ளது. இரவு வணக்கம் என்று பேசியது உதவி விமானி பாரீக் அப்துல் ஹமீது என்று புதிய தகவல் தெரிவிக்கின்றது.
* மாயமான விமானம் குறித்து தேடுதல் வேட்டையில் 2.24 கடல் மைல் தூரத்தில் ஆஸ்திரேலியா கடல் பகுதியில் தேடுதல் வேட்டை ந்டைபெற்று வருகிறது.
* இந்தோனேஷியா வில் இருந்து தெற்கு இந்திய பெருங்கடல் வரை தேடப்படுகிறது.விமானம் விபத்துள்ளாகி இந்திய பெருங்கடலில் விழுந்து உள்லதா எனவும் தேடப்படுகிறது. ஆனால் அவ்வாறு இருந்தால் விமானத்தை தேடுவது எனபது கடினமான காரியம். இந்திய பெருங்கடலின் மொத்த பரப்பளவு 73,556,000 சதூர கிலோ மீட்டர் ஆகும்.
* விமானம் நடுவானில் பறந்து கொண் டிருந்த போது வித்தியம் பேட்டரியில் இருந்து தீப்பொறி ஏற்பட்டு அது விமானத்தின் ஏற்றப்பட்டிருந்த சரக்கு பகுதியில் பிடித்து விபத்து இருக்கலாம்.
* விமானத்தில் பயணம் செய்த நபர் விமானியின் காக்பிட் எனகூறப்படுகிற விமானியின் அறைக்கு சென்று கடத்தலில் ஈடுபட்டிருக்கலாம். ஒரு வேளை கடத்தியிருந்தால் அவர்களின் கோரிக்கை என்ன என தெரிய வில்லை.
* ஒருவேளை விமானம் குண்டு வைத்து தகர்க்கப்பட் டிருக்கலாம். அவ்வாறு நடந்திருந்தால் 35 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்த விமானத்தின் உடைந்த பாகங்கள் மற்றும் எரிபொருள் துகள்கள் கடலில் மிதந்திருக்க வேண்டும். ஆனால் அதற் கான அறிகுறி எதுவும் இல்லை.
* 2-வது உலக போரின் போது அடர்ந்த காட்டுப் பகுதிக் குள் உருவாக்கப்பட்ட ரகசிய ஓடு தளத்தில் அது தரை இறக்கப்பட்டு மறைத்து வைக்கப்பட்டிருக்க வேண் டும்.
* சமீபத்தில் மலேசிய எதிர்க் கட்சி தலைவர் அன்வர் இப்ராகிம் ஓரின சேர்க்கை புகார் காரணமாக ஜெயிலில் அடைக்கப்பட்டார். அதற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக இப்ராஹிமின் தீவிர ஆதர்வாளரான விமானத்தின் கேப்டன் ஷகாரி அகமது ஷா (53) விமானத்துடன் சென்று தற்கொலை செய்து இருக்க லாம்.
* சீனாவைச் சேர்ந்த விமான என்ஜினீயர் மொகுத் கைருல் அமிர் சலாமத் (29) என்பவர் பய ணம் செய்துள்ளார். அவர் தொழில்நுட்பம் தெரிந்த வர். அவர் விமான கம்ப்யூட்டரில் விமான பாதையை மாற்ரி நாசவேலையில் ஈடுபட்டி ருக்கலாம்.
* அமெரிக்காவின் ரகசிய கடற்படை தளம் இந்திய பெருங்கடலின் டிகோ கார்சியா தீவில் உள்ளது. அமெரிக்கா அந்த விமானத்தை திசை திருப்பி அங்கு மறைத்து வைத்திருக்கலாம் என ரஷியாவின் உளவுத்துறை தெரிவித்துள்ளது. ஆனால் அதை அமெரிக்கா திட்ட வட்டமாக மறுத்துள்ளது.
* ரேடார் கருவியில் தெரி யாமல் இருக்கும் வகை யில் விமானத்தை தாழ் வாக பறக்க வைத்து ஆப் கானிஸ்தானுக்கு தலிபான் தீவிரவாதிகள் கடத்தி யிருக்கலாம். அமெரிக்காவில் நடந்த தாக்குதல் போன்று இந்தியாவில் அரங்கேற்ற விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என அந்நாட்டு முன்னாள் மந்திரி ஸ்ட்ரோப் தல்போ தெரிவித்து இருந்தார். அதை இந்திய உளவுத் துறை மறுத் துள்ளது.
* ஒரு வேளை மனிதர்கள் பற்றி அறிய விண்கலன் மூலம் இந்த விமானத்தை வேற்று கிரகவாசிகள் கடத்தி சென்றிருக்கலாம்.
* மலேசிய விமானம் பறந்த அதே வேளையில் இந்தியா, பாகிஸ்தான் வான்வெளி எல்லையில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானமும் பறந்துள்ளது. அது மட்டும் அந்நாடுகளின் ரோடார் திரைகளில் தெரிந்துள்ளது. ஆனால் மலேசிய விமானம் தெரியவில்லை.அது தெரியாமல் இருக்க சிங்கப்பூர் விமானத்தில் பின்னாலேயே மலேசிய விமானமும் இயக்கப்பட் டிருக்கலாம்
என்பன போன்ற கோணங்களில் மலேசிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comments:
Post a Comment