உங்கள் கணனியை நீங்கள் துவக்கும் போது அது உங்கள் பெயரை கூறி வரவேற்க வேண்டுமா?

11:49 AM 0 Comments

தொழில்நுட்ப உலகில் எத்தனையோ சுவாரஷ்யமான அம்சங்கள் உள்ளன அந்த வகையில் இன்றும் ஒரு சுவாரஷ்யமான விடயத்தினை பாப்போம்.

உங்கள் கணனியை நீங்கள் துவக்கும் போது அது உங்களை நற்செய்தி கூறி வரவேற்கவேண்டும் என எண்ணுகிறீர்களா? 


அப்படியாயின் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுக.


  • பின்வரும் வரிகளை  Copy செய்து ஒரு Notepad இல் இட்டுக்கொள்க. 
  • Dim speaks, speech
    speaks="Welcome to your PC, Sathurjan"
    Set speech=CreateObject("sapi.spvoice")
    speech.Speak speaks 
  • பின் மேற் தரப்பட்டுள்ள வரிகளில் Sathurjan எனும் இடத்தில் உங்கள் பெயரை இட்டு Notepad இனை VBS கோப்பாக சேமித்துக்கொள்ளுங்கள்.

  • VBS கோப்பாக சேமித்துக்கொள்ள Notepad இல் Save As என்பதனை சுட்டி தோன்றும் சாளரத்தில் Save as type என்பதில் All Files என்பதனையும் File Name என்பதில் நீங்கள் விரும்பும் ஒரு பெயருடன்  .vbs எனவும் தச்சு செய்து (Ex: Welcome.vbs) கணனியில் சேமித்துக்கொள்க. 

  • பின் நீங்கள் பயன்படுத்துவது Windows XP நிறுவப்பட்ட கணனி எனின் Run Program ஐ திறந்து Startup என தட்டச்சு செய்க.
  • நீங்கள் பயன்படுத்துவது Windows Vista, Windows 7/8/8.1 எனின் Run Program இல் shell:startup என தட்டச்சு செய்து Enter அலுத்துக.
  • இனி திறக்கும் கோப்புறையில் (Folder) நீங்கள் ஏற்கனவே சேமித்த VBS கோப்பினை Past செய்து Close செய்க 

  • அவ்வளவு தான்!...

இனி நீங்கள் உங்கள் கணணியை துவக்கும் போது அது உங்கள் பெயரை கூறி வரவேற்கும்.

0 comments: