கணனியை கடு கதி வேகத்தில் பேண உதவும் 30 இற்கும் மேற்பட்ட வசதிகளை தன்னகத்தே கொண்டுள்ள இலவச மென்பொருள்.

11:28 AM 0 Comments

உங்கள் கணனி மந்த கதியில் இயங்குகின்றதா? 

புதிதாக இயங்குதளம் நிறுவப்பட்டவுடன் கணனிகள் மிக வேகமாகவும் காலப்போக்கில் அவற்றினை நாம் முறையாக பேணா விட்டால் அவைகள் இயங்கும் வேகம் குறைவதும் வழமையானதே.

காலப்போக்கில் கணனியின் வேகம் குறைவதற்கு காரணம் என்ன?


எமது கணனி மந்தகதியில் இயங்குவதற்கு பல காரணங்கள் இருந்தாலும் கணனியில் தேங்கும் தேவையற்ற கோப்புக்கள், கணனி இயங்கத் துவங்கும் போது அதனுடன் சேர்ந்து இயங்கும் மென்பொருள்கள் Windows Registry இல் ஏற்படும் குறைபாடுகள் போன்றன வற்றினை முக்கியமாக குறிப்பிடலாம்.

இவ்வாறான குறைபாடுகளை நாமாக அறிந்து நிவர்த்தி செய்து கொள்ளலாமா?


இது போன்று எமது கணனியில் ஏற்படும் குறைபாடுகளை நாமே கண்டறிந்து நிவர்த்தி செய்வதென்பது சாத்தியமாகாத விடயம் இருந்தாலும் இவற்றினை சில மென்பொருள்களின் உதவியைக் கொண்டு நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.



கணனியின் வேகத்தை பேணுவதற்குசிறந்த இலவச மென்பொருள்கள்உண்டா?


இதற்கென ஏராளமான மென்பொருள்கள் இருந்தாலும் அவற்றுள் விரல் விட்டு எண்ணக் கூடிய சில மென்பொருள்களே சிறந்த பயனை தருகின்றது. அவற்றுள் அனைவரும் அறிந்த Ccleaner மென்பொருளும் ஒன்று என்றாலும் அதனையும் விட சிறந்த வசதிகளை தரக்கூடிய Glary Utilities மென்பொருளை அதிகமானோர் அறிந்ததில்லை.

 

 

 இது Ccleaner இற்கு ஈடான வேகத்தினை கொண்டுள்ளதுடன் அதனை விஞ்சும் பல வசதிகளையும் சேர்த்தே தருகின்றது. 


இதில் காணப்படும் 1 Click Maintenance எனும் வசதி மூலம் பொதுவாக அனைத்து கணனிகளிலும் ஏற்படக்கூடிய முக்கிய பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றினை நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.


1 Click Maintenance பகுதியில் காணப்படும் Scan For Issues என்பதனை சுட்டுவதன் மூலம் ஒரே தடவையில் பின்வரும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொள்ள முடியும்.

  • Registry Cleaner - இதன் மூலம் உங்கள் விண்டோஸ் கணனியில் உள்ள Regisry இல் காணப்படும் குறைபாடுகள் கண்டறிந்து நீக்கப் படும்.
  • Shortcut Fixer -தேவையின்றி தேங்கியிருக்கும் Shortcut போன்றவைகள் நீக்கப்படும்.
  • Spyware Remover - கணனிக்கு தீங்கு விளைவிக்கும் நிரல்கள் கண்டறியப்பட்டு நீக்கப்படும். 
  • Disk Repair - வன்தட்டிலுள்ள  குறைபாடுகள் கண்டறியப்பட்டு நீக்கப்படும்.
  •  Tracks Eraser - உங்கள் இணைய உலாவிகளில் Cache நினைவகத்தில் சேமிக்கப் படும் தற்காலிக கோப்புக்கள் நீக்கப்படும்.
  • Temporary Files Cleaner - கணனியில் சேமிக்கப்படும் தேவையற்ற தற்காலிக கோப்புக்கள் நீக்கப்படும்.
  • StartUp Manager - இதன் மூலம் உங்கள் கணனி இயங்கத் துவங்கும் பொழுது அதனுடன் இணைதாற் போல் இயங்கத்துவங்கும் தேவையற்ற மென்பொருள்கள் கண்டறியப்பட்டு நீக்கப்படும்.


இவைகள் தவிர Advanced Tool எனும் பகுதியினூடாக உங்கள் கணனியை பேணுவதற்கும் மேலதிக தேவைகளுக்கும் என 30 இற்கும் மேற்பட்ட Tool களை இது தன்னகத்தே கொண்டுள்ளது.

எந்த ஒரு தரப்பினராலும் மிக இலகுவில் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் எளிமையான இடைமுகத்தினை கொண்டுள்ளதுடன் இதனை குறிப்பிட்ட தளத்திலிருந்து இலவசமாகவே தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளவும் முடிகின்றது.

குறிப்பிட்ட மென்பொருள் அதன் புதிய பதிப்பை தானாக இனக்கண்டு தானாகவே மேம்படுத்திக்கொள்ளும் வசதிகள் போன்ற ஒரு சில வசதிகளை மாத்திரம் தேவைப்படின் கட்டணம் செலுத்தி பெறவேண்டியுள்ளது. இருப்பினும் இதில் தரப்படும் இலவச வசதிகள் ஒரு தனிப்பட்ட பயனாளருக்கு மித மிஞ்சியதே என்று எண்ணத் தோன்றுகின்றது.

நீங்களும்இதனை தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.


0 comments: