சூரிய ஒளியை பார்க்கும் போதும் கண்கள் கூசுகின்றனவே! அது ஏன்?

7:30 AM 0 Comments

சூரிய ஒளியை பார்க்கும் போதும், பிரகாசமான விளக்குகளை பார்க்கும்போதும் நம் கண்கள் கூசுகின்றனவே! அது ஏன்? சூரிய ஒளி மற்றும் பிரகாசமான ஒளியை பார்ப்பதினால் கண்கள் கூசுவதற்கு கண்களில் உள்ள தகவமைப்பே முக்கிய காரணம்.
கண்கள் குச்சி வடிவ செல்களால் நிறம்பப் பெற்றவை. பிரகாசமான ஒளியைப் பார்க்கும் போது, கண்ணில் அதிகமுள்ள குச்சி செல்களிலுள்ள ரொடப்ஸின் என்ற நிறமி செயலிழக்கப்படுகிறது. இதனால் கண்களில் ஒளி-வேதியியல் வினை நிகழ்ந்து பார்வைத்திறன் மட்டுப்படுகிறது.
மேலும் சில சமயங்களில் ஒளி அளவிற்கு ஏற்ப சில வினாடிகளுக்கு நமக்குப் பார்வையே தெரியாது. வெளியில் இருந்து திரையரங்கினுள் நுழையும்போதும் இந்நிலை ஏற்படுவதை நாம் அறியலாம். மேலும் ஒளி அளவிற்கேற்ப கண்ணுக்குள் செல்லும் ஒளியின் அளவை விழித்திரை தசைகள் ஒழுங்குபடுத்துகின்றன.
அதாவது கண்களின் மையத்தில் அமைந்துள்ள கருவிழியின் விட்டத்தின் அளவு விழித்திரை தசைகளால் தானியங்கு நரம்புகளின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் பல்வேறுபட்ட ஒளி அளவுகளிலும் நம்மால் தெளிவாக பார்க்க முடிகிறது.

0 comments: