ஆயுள் முழுதும் எமது தரவுகளை பாதுகாக்க ஒரு வழி.

8:42 AM 0 Comments

ADrive மூலம் நாம் எமது தரவுகளை உலகின் எந்த மூலையில் இருந்தும் அணுகலாம்.

இப்பொழுதெல்லாம் MB, GB ஐ விட்டுவிட்டு TB, ZB பேச வேண்டிய காலம் வந்துவிட்டது. நாம் எமது கணனியின் வன்தட்டை (Hard disk) 20Gb, 40GB என மிகக்குறைந்த கொள்ளவிலேயே பயன்படுத்தி வந்தோம் என்றாலும் அது தற்போது 750GB, 1TB என அதிகரித்து விட்டது.
தரவுகளை சேமிக்க இடப்பற்றாக்குறையின் காரணமாக நாம் 20Gb, 40GB இலிருந்து 750GB, 1TB ஆக அதிகரித்துக்கொன்டாலும் இவ் இரண்டுக்கும் பொதுவான பிரச்சினை ஒன்றுள்ளது. அதாவது ஒருவேலை நமது வன்தட்டு பழுதாகிவிட்டால் அல்லது யாராவது அதனை திருடி விட்டால் அல்லது வேறு காரணங்களால் நமது வன்தட்டிலுள்ள தரவுகளை பெற முடியாவிட்டால் அப்போது என்ன செய்வது. இதற்காகத்தான் உள்ளது Online Drive



நாம் இணையத்தின் ஊடாக எமது தரவுகளை தரவேற்றம் (Upload) செய்வதன் ஊடாக Online Drive இல் எமது தரவுகளை சேமித்துக்கொள்ளலாம்.
Online Drive சேவை வழங்குனர்கள் Google Drive, Sky Drive போன்றன பல இருந்தாலும்ADrive என சற்று வித்தியாசமான ஒரு Online Drive உள்ளது. இது பல சிறப்பான சேவைகளை பயனர்களுக்கு வழங்குகின்றது. இலவசமாக 50Gb இடம் வழங்குவதுடன் கட்டணம் செலுத்தினால் 1000GB வரை இடம் வழங்குகிறது.


பொதுவாக Online Drive களின் சிறப்பம்சங்கள்.

  • நாம் உலகில் எப்பாகத்திலிருந்தும், எந்த நேரத்திலும், எந்த ஒரு சாதனத்திளிருந்தும் (Computer, Mobile, Tablet) எமது தரவுகளை பெறலாம்.
  • மிகவும் பாதுகாப்பாக சேமித்துக்கொள்ள முடிவதுடன் music, videos, photos, documents போன்றவைகளை இலகுவாக பகிர்ந்து கொள்ளவும் முடியும்.
  • நமது வன்தட்டு பழுதாகிவிட்டால் அல்லது யாராவது அதனை திருடி விட்டால் அல்லது வேறு காரணங்களால் நமது வன்தட்டிலுள்ள தரவுகளை நாம் இழந்து விட்டால் எவ்வித கவலையுமின்றி Online Drive மூலம் மீள பெற்றுக்கொள்ளலாம்.
இது தவிர ADrive இற்கு என்றே இருக்கும் தனியான சிறப்பம்சங்கள்.

  • அதிக கொள்ளளவு கொண்ட கோப்புக்களை பகிர்ந்து கொள்ள முடிவதுடன் அதனை ADrive இலிருந்தே E-mail செய்யும் வசதியுமுள்ளது.
  • உங்களது Word, Excel, Powerpoint போன்ற ஆவணங்களை ADrive இல் இருந்த வன்னமே திறக்கலாம், திருத்தலாம் மற்றும் திருத்திய பின் சேமிக்கவும் முடியும்.
  • உங்களது Adrive இல் இருக்கும் ஆவணங்களை உங்களது blog அல்லது website களில் இணைக்கலாம்.
  • நீங்கள் அதிகமான கோப்புக்களை தரவேற்றம் செய்திருந்தால் குறிப்பிட்ட ஒரு கோப்பை அல்லத்து ஆவணத்தை தேடுவது சிரமம் இதற்காக Search Tool தரப்பட்டுள்ளது.
  • தமிழில் அல்லது வேறு எந்த ஒரு மொழியிலும் எமது கோப்புக்களை நிருவகிக்கலாம்.
  • இதனை Android மற்றும் ios சாதனங்கள் மூலம் கையாளலாம்.
மேலும் கட்டணம் செலுத்தி பயன் படுத்தும் போது இதனை விட அதிகமான வசதிகளை வழங்குகின்றது.

  • கட்டணம் செலுத்துவதன் மூலம் 1000GB வரை அதிகரித்துக்கொள்ளலாம்.
  • உங்களது கோப்புக்களை FTP/SSL மூலம் பாதுகாப்பாக கையாளலாம்.
  • உங்களது ஆவணங்கள் கோப்புக்களுக்கான பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்துகின்றது.
  • நேரடியாக ADrive Desktop Application மூலம் உங்களது தரவுகளை அணுகலாம்.
  • உங்களது தரவுகளை நீங்கள் அழித்துவிட்டாலும் ADrive இன் snapshot technology மூலம் அதனை நீங்கள் மீள பெற்றுக்கொள்ளலாம்.
  • ஒரே தடவையில் 16GB அளவுள்ள கோப்பினை தரவேற்றலாம்.
  • ஒரே நேரத்தில் ஒரே உலாவியில் கட்டணம் செலுத்தப்பட்ட 10 வெவ்வேறான கணக்குகளை அணுகலாம்.
  • 24 மணித்தியாலம் 7 நாட்களும் அவர்களின் தொழில்நுட்ப உதவியினை பெறலாம்.
  • 3 ஆம் தரப்பினரின் விரம்பரங்கள் இருக்காது.
  • அத்துடன் நீங்கள் பகிரும் கோப்புக்கள் ஆவணங்களை தன்னியக்க முறையில் நீக்கும் வசதியுள்ளது.
  • ஒரு நிறுவனமாயின் ADrive இல் ஊழியர்களை அனுமதித்து தகவல் தரவு பரிமாற்றத்தை மேட்கொள்ளலாம்.
இங்கு 3 வகையான கணக்குகள் உள்ளது இதில் உங்களுக்கு தேவையான/பொருத்தமான எதையும் தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.

  • Personal Premium (14 நாட்களுக்கு இலவசம் பின் கட்டணம் செலுத்தி பயன்படுத்த வேண்டும்.)
  • Business (14 நாட்களுக்கு இலவசம் பின் கட்டணம் செலுத்தி பயன்படுத்த வேண்டும்.)
  • Personal Basic (இது ஆயுள் முழுவதும் இலவசம் என்றாலும் மாதம் $4.92 செலுத்துவதன் மூலம் மேற்கூறப்பட்ட அணைத்து வசதிகளையும் அனுபவிக்கலாம்.ADrive இல் கணக்கை துவங்க : ADrive

0 comments: