வரிக் குதிரைக்கு ஏன் வரி வந்தது..? ரகசியம் விடுவிப்பு.
வரிக் குதிரைக்கு (Zebra) ஏன் அதன் உடலினைப் போர்த்தியுள்ள தோலில் வரி வந்தது என்ற கேள்விக்கு இப்போது விடை கிடைத்துள்ளது.ஹங்கேரி மற்றும் சுவீடன் நாட்டு விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் இருந்து குதிரைகளில் இரத்தம் உறிஞ்சும் ஒரு வகை ஈ தான் இதற்குக் காரணம் என்பது தெரிய வந்துள்ளது.
அந்த ஈ யின் தொல்லையில் இருந்து தப்ப.. கூர்ப்பின் வழி.. இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாகச் சொல்கிறார்கள் விஞ்ஞானிகள்.
குறிப்பாக கறுத்த மற்றும் கபில நிறமான குதிரைகளின் உடலில்
பட்டுத்தெறிக்கும் ஒளியானது முனைவூட்டப்பட்டு ஒரு தளத்தில் பயணிப்பதால்.. ஈக்களை
அவை இலகுவில் கவர்ந்து விடுவதால், உணவுக்காக
அந்த நிறக் குதிரைகள் ஈக்களால் இலகுவில் தாக்கப்படுகின்றனவாம்.
இதைத் தான் வரிக் குதிரைகளுக்கு வரி தோன்றக் காரணமாக இருந்துள்ள விடயமாக இனங்காட்டுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
எதுஎப்படி இருந்தாலும் இந்த ஆராய்ச்சி முடிவு மட்டுமே இறுதியானது என்று சொல்ல முடியாது. இந்த வரிக்குப் பின்னால் இருந்து எழுந்த பிற அறிவியல் தத்துவங்களையும் இதற்காக உடனடியாக நிராகரிக்க முடியாது என்கிறார்கள் வேறு சில ஆய்வாளர்கள்.
0 comments:
Post a Comment