தொல்லைகள் மறந்து ஒரு சில நிமிடம் ஓய்வெடுக்க உதவும் அழகிய இணைய தளங்கள்.
இன்று ஒரு தனி மனிதனால் செய்ய முடியாத கற்பனைக்கு எட்டாத பல காரியங்களையும் கணணியை பயன் படுத்தி சில நொடிப் பொழுதுகளில் செய்து முடிக்க முடியுமென்றால் அதனை மறுப்பதற்கில்லை.
எனவே இன்று வீட்டுக்கு வீடு நிறுவனத்துக்கு நிறுவனம் என கணணி தனது ஆதிக்கத்தை செலுத்திவிட்ட இன்றைய நிலையில் கணணியை பயன்படுத்தாதோர் யார் தான் இருக்க முடியும்.
எது எப்படியோ குறிப்பிட்ட ஒரே செயல்பாட்டில் நாம் தொடர்ந்து ஈடுபடுவதானால் சலிப்பு, களைப்பு ஏற்படுவதென்பது மனித இயல்பல்லவா? எனவே நாம் கணணியை தொடர்ந்து பயன்படுத்துகையில் ஏற்படும் சலிப்பை சமாளிக்க பின்வரும் தளங்கள் உங்களுக்காக உதவுகின்றது.
============> Calm
இது Calm எனும் தளமாகும் நீங்கள் இந்த தளத்துக்கு பிரவேசித்தவுடன் நீங்கள் இளைப்பார வேண்டிய நேர அளவை தேர்ந்தெடுக்க வேண்டியது தான் 2 நிமிடம், 5 நிமிடம், 10 நிமிடம் என இங்கு நேர அளவுகள் இருக்கின்றன.
============> Silk
இது Silk எனும் தளம் இது கருப்பு நிற பின்புலத்தினை கொண்டுள்ளது. இதில் நீங்கள் கீறும் வடிவங்கள் சமச்சீராக இருபக்கங்களிலும் தோன்றுவதுடன் பின்புல ஒலியையும் கேட்க முடிகிறது.
============> Line 3D
Line 3D எனப்படும் இந்த தளத்தில் 3D Bar களை அவதானிக்கலாம். உங்கள் களைப்பு நீங்கும் வரையில் அவற்றினை விருப்பம் போல் வலைத்துக் கொள்ளுங்கள்.
============> Rain For Me
கடும் வெயில் காலாமா? மலையோசையை கேட்கவே ஆசையாக இருக்கின்றதா? அப்படியெனின் இதோ உங்களுக்காக Rain For Me எனும் தளம் உதவுகின்றது.
============> Into Time
Into Time எனப்படும் இந்த தளம் பல அருமையான நிறங்களை மாறி மாறி தோன்றச் செய்கின்றது. அதன் மேல் Clik செய்து பாருங்கள் ஏராளமான நிறங்களை கொண்ட கட்டங்கள் உருவாகுவதனை அவதானிக்கலாம்.
============> Falling Falling
இது Falling Falling என அழைக்கப்படுகின்றது. இந்த தளத்துக்கு விஜயம் செய்து பாருங்கள் ஒரு வடிவிலான பல உருவங்கள் தொடர்ச்சியாக கீழே விழுவதாய் உணர முடிவதுடன் அதற்கேற்றவாரான ஒலி பின்புலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
============> Tone Matrix
Tone Matrix எனும் இந்த தளத்தில் ஏராளமான சிறிய கட்டங்கள் தரப்பட்டுள்ளது. இதில் சில புள்ளிகளை ஏற்படுத்துவதன் மூலமோ அல்லது கோடுகள் வரைவதன் மூலமோ அதற்கேற்ற தாளத்தினை கேட்க முடியும்.
============> Do Nothing For 2 Minutes.
Mouse, keyboard ஐ கூட பிடிக்க வேண்டாம் 2 நிமிடம் சும்மா இருந்தால் மட்டும் போதும் என அழைக்கிறது இதோ இந்த தளம் Do Nothing For 2 Minutes.

0 comments:
Post a Comment