200 க்கும் மேற்பட்ட Format களில் Video வினை Convert செய்யும் கட்டண மென்பொருளுக்கு ஈடான ஒரு இலவச மென்பொருள்...
Freemake Video Converter எனும் Video Converter அதிகமானோர் அறிந்திராத ஒரு மென்பொருள்.
இது எமது Video க்களின் Format இனை மாற்ற உதவுகிறது. Video க்களின் Format இனை மாற்ற எத்தனையோ மென்பொருள்கள் இருந்த போதும். இந்த Freemake Video Converter எனும் மென்பொருளின் சேவை சிறப்பானது.
- இது இலவசம் என்பதுடன் எவ்வித கட்டுப்பாடுகளுமற்ற பயனைத்தருகின்றது.
- இது கட்டணம் செலுத்தி பெறப்படும் மென்பொருளுக்கு நிகரான சேவையை பயனர்களுக்கு வழங்குகின்றது.
- மிகவும் வேகமாக செயற்படுவதுடன் இலகுவில் அணைவராலும் பயன்படுத்தும் வகையில் இடைமுகத்தை கொண்டுள்ளது.
- இந்த மென்பொருள் AVI, MP4, WMV, MKV, 3GP, DVD, MP3, iPad, iPhone, PSP, Android phones. Video to MP3 போன்றவைகள் உட்பட 200 க்கும் மேற்பட்ட Format களில் Video வினை Convert செய்கிறது.
- அத்துடன் DVD இல் இருக்கும் Video வினை பிரிக்க (Rip) முடிவதுடன் CD ஒன்றுக்கு Burn செய்வதற்கும் உதவுகின்றது.
- இணையத்தில் இருக்கும் Video ஒன்றின் URL இனை இந்த மென்பொருளில் Past செய்வதன் மூலம் அதனை நேரடியாக MP3 Format இற்கு மாற்றிக்கொள்ளலாம்.
- Blue-Ray Format இற்கு Convert செய்ய முடிவதுடன் அதனை உயர் தரத்தில் Blue-ray Disk இற்கு சேமித்துக்கொள்ளவும் முடியும்.
- தொடர்ந்து 40 மணித்தியாலம் வரை Video இணை Burn செய்ய முடியும். (புதிய வசதி)
- இதன் மூலம் உங்களது Video களினை Youtube இற்கு தரவேற்றம் செய்யலாம். (புதிய வசதி)
- புகைப்படங்களை ஒன்றிணைத்து Slideshows ஒன்றினை உருவாக்க முடியும்.
- அத்துடன் பல்வேறுபட்ட Video க்களினை ஒன்றிணைக்க முடிவதுடன் Video க்களின் அளவினையும் வரையறை செய்யலாம்.
மேலும் பல வசதிகளுடன் இதன் புதிய பதிப்பு கிடைக்கின்றது இந்த அருமையான மென்பொருளை கீழுள்ள இணைப்பின் மூலம் தரவிறக்கலாம்.
Free make Video Converter (Online Setup)
OR
Free make Video Converter (Offline Setup)
உதவிகள் தேவைப்படின் கீழுள்ள Comment box இல் தெரிவியுங்கள்.
0 comments:
Post a Comment