வன்தட்டில் (Hard Disk) எந்த வகையான கோப்பு எந்த அளவில் உள்ளது என்பதனை துல்லியமாக காட்டும் மென்பொருள்
எமது வன்தட்டில் ஏராளமான கோப்புக்கள் குவிந்து கிடக்கின்றன எந்த வகையான கோப்பு எந்த அளவில் உள்ளது என்பது எமக்குத்தெரியாது. சிலவேளைகளில் ஒரே வகையான கோப்புக்களை பல இடங்களில் சேமித்து வைத்திருப்போம். இதனால் வன்தட்டில் இடப்பற்றாக்குறையும் ஏற்படும்.
எமது வன்தட்டில் எந்த வகையான கோப்பு எந்த அளவில் உள்ளது என்பதனை "WinDirStat" எனும் மென்பொருள் துல்லியமாக காட்டுகின்றது. இது வெறும் எண்கள் எழுத்துக்களில் மட்டுமல்லாமல் Graphics வடிவிலும் படம் பிடித்துக்காட்டுகின்றது. இதன் மூலம் உங்கள் கணனியில் இருக்கும் மிகப்பெரிய கோப்பு தொடக்கம் மிகச்சிறிய கோப்பு வரை மிக இலகுவில் அடையாளம் கண்டு கொள்ளலாம்.
அத்துடன் தேவையற்ற மென்பொருட்களை தானியக்க முறையில் அழித்து கொள்ளவும் அழிக்க முடியாத கோப்புக்களை மிக இலகுவில் அழித்து கொள்ளவும் இதுவழிவகுக்கின்றது.
மேலும் நீங்கள் Scan செய்ய விரும்பும் வன்தட்டின் ஒரு பிரிவை அல்லது பலபிரிவை தேர்ந்தெடுத்து Scan செய்யும்வசதியை கொண்டுள்ளதுடன் ஒரு தனித்த கோப்பில் உள்ளவற்றினையும்சோதித்தறியஉதவுகின்றது.
இதன் மூலம் Scan செய்த பின் இறுதி விளைவை Tree Pane மூலம் காட்டுகின்றது. மேலும் கோப்புக்களின் வகையினை பட்டியலிட்டு காட்டுவதுடன் அது எந்த அளவில் இடம் பிடித்திரிக்கின்றது என்பதனையும் துல்லியமாக காட்டுகின்றது.
இன்னும் பல வசதிகளுடன் இந்த மென்பொருள் இலவசமாகவே கிடைக்கின்றது இதனை கீழுள்ள இணைப்பின் மூலம் தரவிறக்கலாம்.
1Mb இற்கும் குறைந்த அளவுடைய இந்த மென்பொருளை நீங்களும் தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.
மேலும் பல சுவையான சுவாரஷ்யமான தொழில்நுட்ப தகவல்களுக்கு எமது முகநூல்பக்கத்தினூடாக இணைந்திருங்கள்.
நன்றி
0 comments:
Post a Comment