புகைப்படம் ஒன்றினுள் கோப்பு (File) ஒன்றினை மறைப்பது எவ்வாறு?

10:06 PM , 0 Comments

விண்டோஸ் கணனியில் எமது தனிப்பட்ட கோப்புக்களை ஏனையவர்களிடம் இருந்து மறைத்து வைப்பதற்கு ஏராளமான வழி முறைகள் உள்ளது. 


இருப்பினும் ஒரு புகைப்படத்தினுள் கோப்பு (File) ஒன்றினை மறைத்து வைப்பது என்பது சுவாரஷ்யமான ஒரு விடயம் தானே.

இதோ அதற்கான வழிமுறை.

நீங்களும் புகைப்படம் ஒன்றினுள் கோப்பு ஒன்றினை மறைத்து வைக்க விரும்புகிறீர்களா?

  • நீங்கள் மறைக்க விரும்பும் கோப்பினை ஒரு Zip File ஆக மாற்றிக் கொள்ளுங்கள் (இதற்கு குறிப்பிட்ட கோப்பினை Right Click செய்து 
Send To ===> New ====> Compressed (Zipped) Folder என்பதை சுட்டுக)


  • இனி Jpg, Png போன்ற வடிவங்களில் அமைந்த ஒரு புகைப்படத்தினை தெரிவுசெய்துகொள்க.
  • இனி நீங்கள் Zip செய்த கோப்பினையும் தெரிவு செய்த புகைப்படத்தினையும் C Drive இல் ஒரு கோப்புறையை உருவாக்கி அதனுள் Past செய்க.
  • உதாரணத்திற்கு நீங்கள் C Drive இல் உருவாக்கிய கோப்புறையின் பெயர் Test என்றும், புகைப்படத்தின் பெயர் Image என்றும் உருவாக்கப் பட்ட Zip File இன் பெயர் Text என்றும் வைத்துக் கொள்வோம்.
  • பிறகு Command Prompt ஐ திறந்து CD\ என தட்டச்சு செய்க. பின் உருவாக்கிய கோப்புறையின் பெயர் Test என்பதால் CD Test என தட்டச்சு செய்து Enter அலுத்துக.
  • பின் copy /b என்பதுடன் குறிப்பிட்ட புகைப்படத்தின் பெயரையும் Zip File இன் பெயரையும் தட்டச்சு செய்து மீண்டும் குறிப்பிட்ட புகைப்படத்தின் பெயரை தட்டச்சு செய்து Enter அழுத்த வேண்டும். அவ்வாறு தட்டச்சு செய்தால் அது பின்வருமாறு அமையும்.

copy/b Image.png + Text.zip image.png 


  • மேலே தெரிவு செய்த புகைப்படத்தின் வடிவம் Png என்பதால் மேலே உள்ள வரிகளில் PNG என வந்துள்ளது. நீங்கள் தெரிவு செய்யும் புகைப்படம் எந்த வடிவமோ அந்த வடிவத்தின் குறியீட்டினை அந்த இடத்தில் பிரதி செய்க. (.ico, .jpg, .jpeg, Bmp .... ETC)
மேலுள்ள வரிகளை நீங்கள் சரியாக தட்டச்சு செய்திருந்தால் Enter அலுத்துக.


அவ்வளவுதான். !!! இனி குறிப்பிட்ட புகைப்படத்தினுள் குறிப்பிட்ட கோப்பு மறைக்கப்பட்டு விடும்.

பின் நீங்கள் மறைத்த கோப்பினை குறிப்பிட்ட புகைப்படத்தில் இருந்து பார்க்க Winrar இனை பயன்படுத்தி குறிப்பிட்ட புகைப்படத்தினை திறவுங்கள். அதில் நீங்கள் மறைத்த கோப்பினை அவதானிக்கலாம்.

0 comments:

உலகின் முதல்? டைனோசர் பிறந்துள்ளது, குளோனிங் முறையில்!!!

8:13 AM 0 Comments

இங்கிலாந்தின் லிவர்பூல் ஜோன் மோர் பல்கலைக்கழகத்தினர் வெற்றிகரமான முறையில் டைனோசர் குட்டி ஒன்றை குளோனிங் மூலம் உருவாக்கியுள்ளதாக அந்த பல்கலைக்கழகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த டைனோசர் குட்டிக்கு “ஸ்பெட்” செல்லப் பெயர் சூட்டியுள்ளனர். குளோனிங் முறையில் உருவாக்கப் பட்டுள்ள இந்த டைனோசர் குட்டி பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

டைனோசரின் மரபணு தீக்கோழி ஒன்றின் கருவில் செலுத்தி விஞ்ஞானிகள் இதனை உருவாக்கியுள்ளனர். பல டைனோசர் மரபணுக்களை செலுத்தி இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதாக உயிரியல் பேராசிரியரான டொக்டர் ஜெரார்ட் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். இவரே இந்த குளோனிங் ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கியவராவார்.

மரபணு மூலம் உருவாக்கப்பட்டுள்ள முதல் குளோனிங் டைனோசர் குட்டியானது மரபணு விஞ்ஞானத்தில் ஒரு மைல் கல்லாகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.




0 comments:

அனைத்து வகையான Dongleகளையும் Unlocking செய்ய - DC Unlocker

8:31 AM 0 Comments

இந்த DC Unlocker மென்பொருளை பயன்படுத்தி Unlocking செய்வது உங்களுக்கு மிக மிக எளிதாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.

இந்த மென்பொருளை பயன்படுத்தி எப்படி ஒரு Dongle இனை Unlocking செய்வது என்று பார்ப்போம்.என்னிடம் தற்போது இருப்பது ZTE , Dongle (Model : MF100) இதை எப்படி Unlocking செய்வது என்று சொல்லுகிறேன்.

01.இங்கு சென்று DC Unlocker இனை Donwload செய்து கொள்ளுங்கள்.

or

02.DC Unlocker இனை Open செய்து,படத்தை பார்த்து செய்து கொள்ளுங்கள்.


















நேரம் போதாமையால்த்தான் இது பற்றி எந்தவிதமான விளக்கவும் நான் கூறவில்லை!உங்களுக்கு இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னை தொடர்பு கொண்டு கேட்கவும்.

0 comments: