7:15 PM 0 Comments


100 ஆண்டுகளில் வேற்று கிரகத்திற்கு பயணம் செய்யலாம் விஞ்ஞானிகள் தகவல்!!


இன்னும் 100 ஆண்டுகளில் அயல் கிரகத்திற்கு பூமியில் இருந்து பயணம் செய்ய முடியும். அதற்கான முயற்சியை அமெரிக்க ராணுவ விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர்.

விண்வெளி மனிதர்கள் போன்ற வாயேஜர் ஆய்வு கலத்தை அனுப்பினால் வேற்று கிரகத்தை சென்றடைய 70 ஆயிரம் ஆண்டுகள் ஆகும். வாயேஜர் மணிக்கு 38 ஆயிரம் மைல் வேகத்தில் செல்லக் கூடியது ஆகும்.

சூரியக் குடும்பத்தில் பூமியைத் தவிர இதர நட்சத்திரங்கள், கிரகங்கள் மனிதர்கள் வாழக்கூயதாக இல்லை. எனவே அயல் கிரகத்தை சென்றடைய விரும்பினால் அல்பா சென்டவுரி என்ற நட்சத்திரமே நமக்கு அருகாமையில் உள்ளது. எனவே நாம் செல்ல விரும்பக் கூடிய கிரகமாகவும் உள்ளது.

அயல் கிரகத்திற்கு செல்லும் திட்டம் 100 வருட நட்சத்திரக் கப்பல் என அழைக்கப்டுகிறது. இந்த திட்டம் குறித்து இன்னும் 12 வாரங்களில் முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.

0 comments:

7:14 PM 0 Comments


மிரட்டுகிறது சூரியப் புயல்: மின்கிரிட், செயற்கைக்கோள்களுக்கு ஆபத்து வருமா!!


சூரியனில் உருவாகியுள்ள புயல், பூமியின் காந்த களத்தை தாக்கியுள்ளது. இதனால், மின் தொகுப்பை இணைத்து வழங்கும் கிரிட், செயற்கைக்கோள் இயக்கம், விமானப் போக்குவரத்து பாதை ஆகியவை பாதிக்கப்படலாம் என, விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

சூரியனின் மேல்மட்டத்தில் எழுந்துள்ள அதிர்வலைகள் அல்லது சூரியப் புயல், நேற்று பூமியின் காந்த களத்தை தாக்கியது. இவை புழுதிப் புயல் போல பிரமாண்டமான தோற்றத்துடன் பூமியை நோக்கி அதிவேகமாக வந்தது.

 சூரியனின் மேற்புறத்தில் பல்வேறு வேதியியல் மாற்றங்களால், சூரியக் கதிர்கள் பெருமளவில் கொந்தளித்து காணப்படுகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத வகையில் சூரியனின் மேற்புறம் சமீப காலமாக சீற்றத்துடன் உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி, ஒரு சூரியப் புயல் பூமியைத் தாக்கியது. சூரிய காந்த புயல் மூன்று விதத்தில் நிகழும். முதலில் மின்காந்தத் தூண்டல் கதிர்வீச்சும், இரண்டாவதாக, புரோட்டான்கள் நிறைந்த அதிர்வலையால் கதிர்வீச்சும், மூன்றாவதாக, சூரியனின் கரோனா என்ற மேற்புறத்தில் இருந்து எழும் பிளாஸ்மா கதிர்வீச்சும் அடுத்தடுத்து பூமியை நோக்கி வரும்.

நேற்று தாக்கிய சூரியப் புயல் மிகப் பெரியது எனக் கூறப்படுகிறது. இரு பிரமாண்டமான, "சோப் குமிழி' போன்ற தோற்றத்துடன் தாக்கியதாக, அமெரிக்காவின் "நாசா' விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்தப் புயல் சிதறல்கள் மணிக்கு, நான்கு கோடி மைல் வேகத்தில் பயணித்ததாக தெரிவித்தனர்.

இதனால், விமானப் போக்குவரத்து, செயற்கைக்கோள் செயல்பாடுகள், மின் தொகுப்புகள் ஆகியவை பாதிக்கப்படலாம் என, விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக செயற்கைக்கோள் செயல்பாட்டில் அதிக மின் அழுத்த பாதிப்பு இதனால் ஏற்பட வாய்ப்பு உண்டு.

அதே போல, மின்சாரம் கடத்தும் பெரிய அளவிலான கிரிட் மீது, மற்றொரு அதிக சக்தி மின்சாரம் தாக்கும் போது இந்த கிரிட் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதே போல, "குளோபல் பொசிஷன் சர்வீஸ்' என்ற தகவல் தொடர்பில் அதி நவீன சேவையும் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது.

இந்த சூரியப் புயல் இன்று மாலை வரை நீடிக்கும். சூரியப் புயல், பூமியின் வடதுருவத்தில் தான் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

0 comments:

7:12 PM 0 Comments


உங்கள் கணனியின் முகவரியினை யாரும் கண்டுபிடிக்காமல் மறைக்க வேண்டுமா!!

வீட்டுக்கு ஒர் விலாசம் போல கணனிகளுக்கும் முகவரியுண்டு அதுவே IP Addresa ஆகும். நீங்கள் எந்தவொரு இணையத்தளத்தினை பார்வையிட சென்றாலும் உங்களது முகவரி சேமிக்கப்படும். IP முகவரியினைக் கொண்டு உங்கள் கணனியின் விபரங்கள் தொட்டு உங்கள் விபரங்கள் வரை அனைத்தையும் கண்டிறிய வாய்ப்புண்டு.

 மற்றும் IP முகவரியினைக் கொண்டு Hackers கைவுரிசையைக் காட்டக் கூடும். எனவே பாதுகாப்பான இணைய பாவனைக்கு எமது ip முகவுரியினை மறைத்து வைத்திருப்பது. ஓர் சிறந்த முறையாகும்சூ.

ip முகவுரியினை மறைப்பதற்கான மென்பொருள் பதிவிறக்க தரப்பட்டுள்ளது. அதனை பதிவிறக்கி பின்வரும் படிமுறைகளினை பின்பற்றவும்.(குறிப்பு: இவ் மென்பொரளிளை சில Anti Virusகள் தடைசெய்யும்)

Auto Hide IP v5.1.2.6 மென்பொரளினை இன்ரோல் செய்யுங்கள்.
இன்ரோல் முடிந்தபின் அதனை ரன் செய்ய வேண்டாம்.
பின்னர் கிரக் “AutoHideIP.exe” என்பதைனை கொப்பி செய்து. “C:\Program Files\AutoHideIP\”  இங்கு சென்று AutoHideIP.exe என்பதனை Overwrite செய்யுங்கள்.
அவ்வளவுதான்.
பாதுகாப்பான இணைய பாவனைக்கு எமது வாழ்த்துக்கங்ள்.

AutoHideIP மென்பொரளினை பதிவிறக்கிக் கொள்ள : இங்கே கிளிக் செய்யவும்.

0 comments:

6:56 PM 0 Comments

பயர்பாக்ஸ் உலாவியின் பயன்கள்!!

இணையத்தில் பேஸ்புக் போன்ற தளங்களில் நாம் உலாவும் பொழுது அவற்றில் உள்ள படங்களின் Thumbnail மிகச் சிறியதாக இருப்பதால் அவற்றை தெளிவாக நம்மால் காண இயலுவதில்லை.

இது போன்ற தளங்களில் உள்ள சிறு படங்களை முழுமையாக காண உதவும் நெருப்புநரிக்கான நீட்சி Thumbnail-Zoom மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
Add to Firefox பொத்தானை அழுத்தி உங்கள் நெருப்புநரி உலாவியில் பதிந்து கொள்ளுங்கள். அதன் பின் Status bar இல் இதற்கான ஐகான் தோன்றியிருப்பதை கவனிக்கலாம்.

இந்த நீட்சி Facebook மட்டுமின்றி Twittter, Picassa, Flickr, Wikipedia போன்ற பல தளங்களில் பயனுள்ளதாக இருக்கிறது.
இது போன்ற தளங்களில் உலாவும் பொழுது குறிப்பிட்ட Thumbnail மீது மவுசை கொண்டு செல்கையில் அந்த படங்கள் பெரிதாகவும் தெளிவாகவும் நமக்கு காண கிடைக்கிறது.

0 comments:

6:46 PM 0 Comments



சிறார்களின் இணையப்பாவனை​யை கண்காணிக்க சிறந்த மென்பொருள்


இன்று கல்விபயிலும் சிறார்களின் மிக முக்கியமான பொக்கிஷமாக திகழ்வது இணையம் ஆகும். எனினும் சிறுவர்கள்


இணையத்தளங்களை பாவிக்கும் போது தவறான வழிகளில் செல்வதற்கான சாத்தியங்களும் காணப்படுகின்றன. எனவே இவற்றைக் கண்காணித்து சரியான முறையில் வழிநடத்துவதற்கு பல மென்பொருட்கள் காணப்படுகின்றன.


அவற்றுள் இந்த ஆண்டு வெளியான Max Keylogger எனும் மென்பொருளானது பல விசேட அம்சங்களை கொண்டதாக காணப்படுகின்றது.


Max Keylogger அம்சங்களாவன,


1. அழுத்தப்படும் ஒவ்வொரு Keyஐயும் துல்லியமாக பதிவு செய்தல்.


2. கணணியினுள் உள்நுழைந்த தருணத்திலிருந்து வெளியேறும் வரையான தொழிற்பாடுகளை பதிவு செய்தல்.


3. பேஸ்புக், கூகுள் டோக், யாகூ மெசன்சர் போன்றவற்றினூடு சட்டில் ஈடுபடுவதை பதிவு செய்தல்.


4. பயன்படுத்தும் மின்னஞ்சல் தொடர்பான முழுமையான தகவல்களை சேமித்தல்.


5. பயன்படுத்தும் இணையத்தளங்கள் தொடர்பான தகவல்களை சேகரித்தல்.


6. தரவிறக்கம் செய்யும் கோப்புக்கள் தொடர்பான பதிவுகளை மேற்கொள்ளல் போன்றனவாகும். 


தரவிறக்க சுட்டி

0 comments: