பென் டிரைவ்களின் தரத்தை சோதிக்க இலவச மென்பொருள் ChkFlsh

பென் டிரைவ் மற்றும் ஏனைய USB கருவிகளின் தரத்தைச் சோதிக்க ChkFlsh என்ற இலவச மென்பொருள் இணையத்தில் கிடைக்கிறது. இதன் மூலம் Read Speed, Write Speed, Sector wise Errors போன்ற விசயங்களை சோதித்து அறியலாம். இதனால் நமது பென் டிரைவ் தரமாக உள்ளதா என்றும் தெரிந்து கொள்ளலாம்.
பென் டிரைவை எப்படி சோதிப்பது?
இந்த மென்பொருளைத் தரவிறக்கி ChkFlsh என்ற கோப்பை கிளிக் செய்யவும். பின்னர் உங்கள் பென் டிரைவை கணிணியில் செருகவும். பென் டிரைவில் உள்ள தகவல்களை அழித்து விட்டு சோதிக்கப் பயன்படுத்துவது நலமானது. இதில் 3 வகையான Access Type கள் இருக்கின்றன.
Use Temporary file என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் Write and Read சோதனையைச் செய்ய முடியும். உங்கள் பென் டிரைவில் ஏதேனும் தகவல்கள் இருந்து Read Test மட்டுமே மேற்கொள்ள வேண்டும் எனில் As Logical Driveஎன்பதைக் கிளிக் செய்து கொள்ளவும். Test Length – இதில் One Full Cycle என்பதைத் தேர்வு செய்யவும். பின்னர் Start கொடுத்தால் பென் டிரைவ் சோதிக்கப்படும்.
ஒவ்வொரு பைல் செக்டார்களாக (File Sector) களாக சோதிக்கப்பட்டு வரும். இறுதியில் ஒவ்வொரு செக்டாரும் பச்சை வண்ணத்தில் காண்பிக்கப்பட்டால் உங்கள் பென் டிரைவ் நலமாக இருக்கிறது என்று அர்த்தம். இதோடு பென் டிரைவின் வேகம் மற்றும் பிழைகள் இருந்தால் காண்பிக்கப்படும்.

தரவிறக்கச்சுட்டி : http://mikelab.kiev.ua/PROGRAMS/ChkFlsh.zip
0 comments:
Post a Comment