12:11 PM 0 Comments


மொனிட்டரில் பிரச்சனையா????


அவசரமாக பணியாற்றிக் கொண்டிருக்கையில் கணணி சரியாக இயங்கினாலும் மொனிட்டர் பிரச்னை செய்தால் பொறுமையிழந்து பதட்டம் ஏற்படும்.
மற்ற துணை சாதனங்களில் பழுது ஏற்பட்டால் அவற்றிற்குப் பதிலாக
இன்னொரு சாதனத்தைப் புதிதாகவோ அல்லது கடனாகவோ பெற்று அப்போதைக்கு நம் கணணி பணியை முடிக்கலாம்.
மவுஸ், கீ போர்டு, ஸ்பீக்கர், ஏன் சிடி மற்றும் பிளாப்பி டிரைவ் கூட உபரியாக வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம் அல்லது பழைய கணணியில் இருந்து கழட்டி வைத்ததைக் கொண்டு இயங்கலாம். ஆனால் மொனிட்டரில் பிரச்னை ஏற்ட்டால் அது இயலாது, உபரியாக ஒன்று வைத்துக் கொள்ளவும் முடியாது.
மற்றவரிடமிருந்து இரவல் வாங்குவதிலும் சிக்கல் ஏற்படும். எனவே மொனிட்டரில் பிரச்ச‌னை ஏற்பட்டால் அதனைப் பொறுமையாக, என்ன பிரச்னை என அலசிப் பார்ப்பதே சிறந்தது. அதற்கான சில வழிகளை இங்கு பார்ப்போம்.
உங்கள் கணணி நன்றாக இயங்கி மொனிட்டரில் எந்த சிக்னலும் வரவில்லை என்றால் கீழ்க்கண்டபடி அதனை ஆய்வு செய்யவும். ஆனால் அதில் எங்கு பிரச்னை என்று உங்களுக்குச் சரியாகத் தெரியும் என்றால் நேராக அதனைச் சரி செய்திடும் வழிக்கே சென்று விடலாம்.

0 comments:

12:08 PM 0 Comments


Blue Screen Error – சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று


விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திரை’ என்று தமிழ்ப் படுத்தலாம் .
இந்த கட்டுரை , மரித்த நீலத்திரையில் சில வகை வாசகங்கள் தோன்றினால் , அந்த எரர்களை சரி செய்யும் வழிமுறைகளை பற்றியது .
முதலில் உங்களிடம் எக்ஸ்பி சிடி இருக்க வேண்டும் . இந்த கட்டுரை , உங்கள் டிரைவுகள் ‘என் டி எப் எஸ்’ ரக பார்மேட்டை கொண்டிருக்கும் என்ற தோரனையில் எழுதப்பட்டது . உங்களுடையது பேட் 32 ரகமாக இருப்பின் , சில வழிமுறைகள் மிச்சமாகும்.
முதலில் உங்கள் எரர் கீழ்கண்ட சொற்களை உடையதாக இருப்பின் , இந்த வழிமுறை கண்டிப்பாக வேலை செய்யும் . ஒரு வேலை எரர் மெஸேஜை படிக்க முடியாமல் வேகமாக ரீஸ்டார்ட் ஆனாலும் நீங்கள் இவ்வழிமுறையை முயற்சித்து பார்க்கலாம் .

0 comments:

12:07 PM 0 Comments


கூகுளின் நெக்சஸ் 7 டேப்லெட்..


கூகுள் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் புதிய நெக்சஸ் 7 டேப்லெட்டை அறிமுகம் செய்து வைத்தது. இந்திய ஆன்ட்ராய்டு ரசிகர்கள் இந்த டேப்லெட்டுக்காகத் தவமிருந்து காத்துக் கொண்டிருக்கின்றனர். காரணம் இந்த டேப்லெட் குறைந்த விலையில் அதாவது ரூ.11,200க்கு விற்பனைக்கு வருகிறது.
இந்த சாதனம் முதலில் ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தைக்கு வருவதாக இருந்தது. ஆனால் அது செப்டம்பர் அல்லது அக்டோபரில் வரும் என்று ஆசஸ் அறிவித்தது. தற்போது இந்த நெக்சஸ் டேப்லெட் கண்டிப்பாக நவம்பர் மாதத்திற்கு முன் இந்திய சந்தைக்கு வந்துவிடும் என்று ஒரு நம்பகமான தகவல் ஒன்று தெரிவிக்கிறது.
இந்த டேப்லெட் என்விடியா டேக்ரா 3 ப்ராசஸர் மற்றும் ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் வர இருக்கிறது. இந்தியாவில் இந்த நெக்சஸ் டேப்லெட் வெற்றி பெறும் என்று நம்பலாம்.

0 comments: