5:39 PM 0 Comments


யானைப் பறவை முட்டை ஒன்று 101,813 அமெரிக்க டொலர்களுக்கு ஏலம்.


யானைப் பறவை முட்டை ஒன்று  ஏலத்தின் போது எதிர்பார்க்கப்பட்டதனை விட இரு மடங்கு அதிக விலையில் விற்பனையாகியுள்ளது. இங்கிலாந்திலுள்ள கிரிஸ்டி எனும் ஏல விற்பனை நிறுவனமே இந்த யானைப் பறவை முட்டையை ஏலத்தில் விற்பனை செய்துள்ளது.  இது குறித்து அந்நிறுவனம் கூறுகையில், இம்முட்டை 20 ஆயிரம் பவுண்ஸ் முதல் 30 ஆயிரம் பவுண்ஸ் வரையில் ஏலத்தில் விற்பனையாகும் என எதிர்பார்த்தோம். ஆனால் எதிர்பார்த்ததனை விட இருமடங்கு அதிகமாக 66,675 பவுண்ஸ்களுக்கு (101,813 அமெரிக்க டொலர்) விற்பனையானது.
ஏலம் ஆரம்பமாகி 10 நிமிடங்களில் பெரும் போட்டிகளின் மத்தியில் தொலைபேசியின் மூலம் அடையாளம் தெரியாத ஒருவரினாலே இந்த யானைப் பறவை முட்டை ஏலத்தில் எடுக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளது. 17ஆம் நூற்றாண்டில் மடக்கஸ்கார் தீவில் யானைப் பறவையினால் இடப்பட்டதாக நம்பப்படும் குறித்த முட்டையானது சாதரணமான கோழி முட்டையைப் போல 100 மடங்கு பெரியது. இதன் விட்டம் 9 இன்ச் அளவானது எனவும் யானைப் பறவை முட்டையை ஏலம் விட்ட கிரிஸ்டி ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.
ElephantBird_bird

0 comments: