Android Pattern Lock ஐ unlock செய்வதற்கான இலகுவான வழி இதோ !!!

12:37 AM 0 Comments


Android mobile களில் கூடுதலான தடவைகள் பிழையாக Pattern இணை தொடுத்தால் அது தானாக Lock ஆகிவிடும் அதன் பின் Reset தான் பண்ண வேண்டும் .ஆகவே அதன் மூலம் நமது போன் இல் உள்ள contacts, messages, apps எல்லாம் இழக்க நேரிடும் .


ஆகவே பேட்டர்ன் லாக் போடப்பட்டு உள்ள போன்களில் பாதுகாப்பிற்காக இதோ ஒரு இலவச மென்பொருள் .இதன் மூலம் கூடுதல் பிழையான பேட்டர்ன் அழுத்தப்பட்டு லாக் ஆகிய மொபைல் ஐ Sms மூலம் மீண்டும் unlock செய்யலாம் ..

இந்த மென்பொருளை உங்கள் மொபைல் இல் இன்ஸ்டால் செய்ய உங்கள் மொபைல் root செய்யப்பட்டு இருத்தல் வேண்டும் .


  • பிறகு Application இணை இன்ஸ்டால் செய்து Superuser permision இணை வழங்குங்கள் .
  • அதன் பின் SMS Bypass Service  இணை ஓபன் செய்யுங்கள் 
  • அதில் Change Secret Code என்பதை கிளிக் செய்து  Secret Code இணை மாற்றலாம் .(Default Secret Code 1234)
  • அவ்வளவுதான் இனி உங்கள் மொபைல் Android Pettern Lock மறந்தால் அல்லது லாக் ஆகினால் கீழ் உள்ளவாறு Pettern Lock இணை reset செய்யலாம் .

Secret code reset செய்யும் முறை 


  • உதாரணமாக உங்கள் secret code 1234 எனின் நீங்கள் message  இல் 1234 reset  என Type செய்து உங்கள் மொபைல் இற்கு sms அனுப்பினால் உடனே Reset ஆகிவிடும் 
  • பிறகு உங்கள் போன் Restart ஆகி Pettern Lock கேட்கும் அதற்கு உங்களுக்கு விரும்பிய Code ஐ வழங்கலாம் ..

0 comments:

முதலில் கோழியா முட்டையா வந்தது?

11:35 PM 0 Comments

இந்த உலகில் நாம் எவ்வளவோ கேள்விகளுக்கு இன்னும் பதில்களே கிடைக்காமல் இருக்கின்றோம். உதாரணத்திற்கு: விண்வெளியில் எங்கேயாவது அன்னிய உயிரினங்கள் (ஏலியன்) இருக்கின்றனவா? இந்தப் பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது? பூமியில் எவ்வாறு உயிர்கள் தோன்றின? இப்படி அளவுக்கும் அதிகமான கேள்விகளுக்கு இன்று வரை பதில்கள் கிடைக்கவில்லை. இப்படித் தான் என்னையும் கொஞ்ச நாளாக ஒரு கேள்வி போட்டு உறுத்திக் கொண்டே இருந்தது. உண்மை சொல்லப்போனால் அந்தக் கேள்வி என்னை மட்டும் இல்லை, இந்த உலகில் பலரை ஆட்டி வைத்த கேள்வி ஆகும்! இப்போ அந்த கேள்வியையும் அதன் பதிலையும் தருகிறேன். அது வேறு ஒன்றுமே இல்லை, நண்பர்களே… 

முதலில் கோழியா அல்லது முட்டையா வந்தது? 

இது என்னடா கேள்வி என்று என்னிடம் கேட்பவர்களுக்கு, இந்த கேள்வியில் இருக்கும் சிக்கல் புரியவில்லை என்று தான் சொல்லலாம்! அது என்ன சிக்கல் என்றால்: ஒரு கோழிமுட்டை ஒரு கோழியில் இருந்து வருகின்றது என்று எடுத்துகொள்வோம். அப்படி என்றால், அந்த கோழிமுட்டை இட்ட கோழி எதில் இருந்து வந்தது? அதுவும் ஒரு கோழிமுட்டையில் இருந்து தானே வந்திருக்கவேண்டும்? அப்போ அந்தக் கோழி இருந்த கோழிமுட்டை எதில் இருந்து வந்திருக்கும்…? இப்படியே தொடர்ந்து கேட்டுக்கொண்டே போகலாம். எனவே, முதலில் எது வந்தது? கோழியா இல்லை கோழிமுட்டையா? இதற்கு அறிவியல் ரீதியான பதில் என்ன? 

சரி, கோழி தான் முதலில் வந்தது என்று எடுத்துக்கொள்வோம். ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தது என்னவென்றால் கோழிமுட்டையின் கோது உருவாக்குவதற்குத் தேவைப்படும் OV-17 எனும் புரதம் கோழியில் மட்டும் தான் கிடைக்கிறது என்று. எனவே ஒரு கோழி இருந்தால் மட்டும் தான் அது OV-17 ஊடாக முட்டைக் கோதும் அத்துடன் கோழிமுட்டையையும் இட முடியும். எனவே, கோழி தானே முதலில் வந்து முட்டையை இட்டது? ஹ்ம்ம்ம்ம்… சரி, இதே விடயத்தை வேறு மாதிரி சிந்தித்துப் பார்ப்போம். முட்டை தான் முதலில் வந்தது என்று எடுத்துக்கொள்வோம்.  பொதுவாக இனப்பெருக்கத்தின் போது இரு உயிரினங்களின் டி.என்.ஏ (DNA) மூலக்கூறுகள் இரட்டித்துப் பெருகி சந்ததிகளுக்குக் கடத்தப்படுகிறது. இதில் கவனிக்கவேண்டியது என்னவென்றால், அப்படி இரட்டித்துப் பெருகும் போது, அந்த டீ.என்.ஏ. சில சமயங்களில் முழுவதும் இரட்டிப்பதில்லை. அது சிறிய மாற்றங்களுடன் இரட்டிப்பதைக் காணலாம். இப்படி ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் ஒரு உயிரினத்தின் டீ.என்.ஏ. மாறுபட்டுத் தான் புதிய புதிய உயிரினங்கள் உருவாகின்றன. எனவே, முன்னொரு காலத்தில் வாழ்ந்த கோழி போன்ற ஓர் உயிரினத்தின் டீ.என்.ஏ. மாற்றமடைந்து தான் இன்று எமக்கு தெரிந்த கோழியினம் உருவாகியிருக்கிறது. சரி, அந்த முன்னொரு காலத்தில் வாழ்ந்த கோழி போன்ற உயிரினத்திற்கு ஒரு பெயர் வைக்கலாம். அதை முற்கோழி என்று அழைப்போம். எனவே, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக முற்கோழிகள் இடும் முட்டைகளில் டீ.என்.ஏ. மாற்றம் அடைந்து, கடைசியில் அந்த முட்டையில் இருந்து நாம் இன்று காணும் கோழி வெளியே வந்து விட்டது. அப்படிப் பார்த்தால், முதலில் வந்தது முட்டை தானே? 

என்ன… குழப்பமாக இருக்கிறதா? இருக்கட்டும்…! 

முட்டை பற்றி இவ்வளவு சொல்கிறேனே, ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விடயம் ஒன்று இருக்கிறது. உண்மையில் கோழிமுட்டை என்பது என்ன? ஒரு கோழி இடும் முட்டையையா கோழிமுட்டை என்கிறோம், அல்லது ஒரு முட்டைக்குள் கோழி இருந்தால் தானா அதைக் கோழிமுட்டை என்கிறோம்? என்ன புரியவில்லையா? சரி, இப்படிப் பார்ப்போம். ஒரு குரங்கு முட்டை இடுகிறது என்று எடுத்துகொள்வோம். அந்த முட்டையில் இருந்து ஒரு யானை வெளியே வந்தால், அந்த முட்டையைக் குரங்குமுட்டை என்று அழைப்போமா, அல்லது யானைமுட்டை என்று அழைப்போமா? இப்போ வித்தியாசம் புரிகிறதா…? 

சரி, நான் ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு சரியான பதில் கிடைப்பதற்கு இந்தப் பிரச்சனையை இரு பார்வையில் பார்க்கவேண்டும்: 

முதலாவது பார்வை: முன்னொரு காலத்தில் முற்கோழிகள், முற்கோழிமுட்டைகளை இட்டன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் டீ.என்.ஏ. மாற்றம் அடைந்து முற்கோழிகள் இட்ட முற்கோழிமுட்டையில் இருந்து ஒரு கோழி வெளியே வந்து விட்டது. அப்படி வந்த கோழி கோழிமுட்டையை இட்டது. எனவே, அந்தக் கோழி, முற்கோழிமுட்டையில் இருந்து வெளியே வந்த காரணத்தால், கோழி தான் கோழிமுட்டைக்கு முதலில் வந்தது. 

இரண்டாவது பார்வை: முன்னொரு காலத்தில் முற்கோழிமுட்டை இட்ட முற்கோழி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னர் கோழிமுட்டை இட்டு அதில் இருந்து கோழி வெளியே வந்து விட்டது. எனவே, அந்தக் கோழி கோழிமுட்டையில் இருந்து வெளியே வந்த காரணத்தால் கோழிமுட்டை தான் முதலில் வந்தது. 

இந்த இரு பார்வைகளையும் மிக அவதானமாகக் கவனித்தீர்கள் என்றால் இதில் இருக்கும் ஒற்றுமை புரிந்துவிடும்! கடைசியில் வருவது கோழி தான்! அதில் எந்த விதமான மாற்றுக்கருத்தும் இல்லை! முதலாவது பார்வையில் முற்கோழிமுட்டையில் இருந்து கோழி வருகிறது. இரண்டாவது பார்வையில் கோழிமுட்டையில் இருந்து கோழி வருகிறது. இரண்டிலுமே முட்டையில் இருந்து தான் கோழி வந்திருக்கிறது! எனவே நான் ஆரம்பத்தில் கேட்ட கேள்விக்கு அறிவியல் ரீதியான பதில் இது தான்: 

கோழிக்கு முதல் முட்டை தான் வந்தது!!! 

பதில் தெரிந்துவிட்டது தானே? வாங்க எல்லோரும் போய் இப்போ ஒரு ஆம்லெட் சாப்பிடலாம்! இந்த தகவல் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள், நண்பர்களே!

0 comments:

கடல் எங்கிருந்து வந்தது...

11:18 PM 0 Comments

ஸ்டீவன் ஜாகப்ஸென் தலைமையில் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் இருந்து சென்ற புவியியலாளர்கள், சமீபத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் கண்டுபிடிப்பினைக் கண்டுபிடித்துள்ளனர். பூமியின் மையப்பகுதி அருகே அதிகளவு தண்ணீர் இருப்பதே அந்தக் கண்டுபிடிப்பு. இதில் என்ன ஆச்சரியம் என்று நினைக்கின்றீர்களா? இந்தத் தண்ணீரின் அளவு புவியின் மேற்பரப்பிலுள்ள எந்தவொரு கடலை விடவும் மூன்று மடங்கு அதிகம். புவியியலாளர்கள் நிலஅதிர்வு தொடர்பான அலைகளின் வேகத்தினைக் கொண்டு, புவிக்கடியில் இருப்பதை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தனர். அப்போது அலைகள் “ரிங்க்வுட்டைட்” எனப்படும் நீலநிற பாறைகளில் பட்டவுடன் அதன் வேகம் குறைந்ததைக் கவனித்தனர். இதன் அர்த்தம் அந்தப்பகுதி நீர் மற்றும் பாறையால் இருப்பதைக் குறிக்கிறது. புவியின் மெல்லிய அடுக்கிற்குக் கீழ் சுமார் 700 கிலோ மீட்டர் வரை இந்தத் தண்ணீர் பரவியுள்ளது. இந்த மெல்லிய அடுக்கு, புவியின் மேற்பரப்பிற்குக் கீழே வெப்பமான பாறையிலான அடுக்கினால் ஆனது. புவியின் மேற்பரப்பிலுள்ள தண்ணீர் எங்கிருந்து வந்தது என்பதற்கு இதுவே சிறந்த ஆதாரம் என ஜாகப்ஸென் கூறினார். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த நீரின் இடம் சரியான வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் உள்ளதாகவும், அந்தத் தண்ணீர் புவியின் மேற்பரப்பிற்கு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை எனவும் ஜாகப்ஸென் கூறியுள்ளார். இது பல புவியியலாளர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தாலும், நீர் புவியின் பிற பகுதிகளில் இருந்து ஊடுருவி இருக்குமா, அல்லது பனிக்கட்டி வால்மீன்கள் பூமியின் மீது மோதியதால் உருவாகியிருக்குமா? இவ்வாறு பல விதமான கேள்விகளை எழுப்புகின்றனர். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள் நண்பர்களே? இந்த நீர் எங்கிருந்து வந்திருக்கலாம்? உங்கள் பதிலைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!

0 comments:

நீங்கள் அனுப்பிய ஈமெயில்லை திரும்ப பெறுவது எப்படி?

9:52 AM 0 Comments

நீங்கள் அனுப்பிய ஈமெயில்லை திரும்ப பெறுவது எப்படி?

நீங்கள் தவறாக sent பண்ணிய ஈமெயில்யை unsent பண்ண முடியும், 

நீங்கள் தவறாகவோ அல்லது மாற்றியோ ஒரு மெயில்யை அனுப்பி விட்டால் அந்த மெயிலை திரும்ப பெற முடியும்.

முதலில் உங்கள் மின்னஞ்சல் கணக்கிற்குள் நுழைந்து கொள்ளுங்கள். 

இப்போது Settings என்பதன் மீது கிளிக் செய்யுங்கள். 

இப்போது Laps – இல் click செய்யுங்கள் 

இப்போது “Undo Send” என்ற பகுதிக்கு வரவும். 

அதில் Undo வசதியை Enable செய்யவும் பின்னர் Save Changes என்ற பட்டனை அழுத்துங்கள்.

இப்போது நீங்கள் ஒருவருக்கு ஈமெயில் அனுப்பிய பிறகு பின்வரும் image தோன்றும் அதில் நீங்கள் Undo என்ற optionயை தேர்வு செய்யவும்.

இந்த image சில நொடிகள் மட்டும் display ஆகும். இந்த image தோன்றும் நேரத்தை 30 வினாடிகள் வரை அதிகப்படுத்த Settings என்பதன் மீது கிளிக் செய்து General என்ற option யை தேர்வு செய்து அதில் Enable Undo Sentல் 30 வினாடிகள் வரை set செய்து Save Changesயை click செய்யவும்.

இப்போது நீங்கள் ஒருவருக்கு ஈமெயில் அனுப்பிய பிறகு Your message has been sent. Undo View Message என்ற image தோன்றும்.

அதில் நீங்கள் Undo என்ற optionயை தேர்வு செய்வதன் மூலம் அந்த mail-யை திரும்ப பெறலாம்.

0 comments:

தொலைந்து போன கையடக்க தொலைபேசியை கண்டு பிடிப்பது மற்றும் ஒரு கையடக்க தொலைபேசியை உளவு பார்ப்பது எப்படி?

11:54 PM 1 Comments

இந்த நவீன யுகத்தில் அனைவரும் பாவிப்பதோ விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள். அனைவரின் கைகளிலும் புகுந்து விளையாடும் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில் முண்ணணி வகிப்பது சாம்சங் ஆகும். உங்கள் விலை உயர்ந்த சாம்சங் கையடக்க தொலைபேசி தொலைந்து போகும்பொது உங்கள் மனநிலய் எவ்வாறு இருக்கும்.. அத்தோடு சேர்ந்து உங்கள் விலை மதிப்பற்ற தகவல்களும் சேர்ந்து தொலைந்து போவதை பற்றி கற்பனை செய்து பார்த்ததுண்டா? இதற்கு ஒரே வழி வருமுன் காப்பதே ஆகும். இந்த கட்டுரையில் நாங்கள் பார்க்க இருப்பது உங்கள் சாம்சங் கையடக்க தொலைபேசி தொலைந்து போனால் அதை எவ்வாறு கண்டு பிடிப்பது அல்லது அதை தொலைவில் இருந்து செயற்படுத்துவது.


இதற்கு உங்கள் கையடக்க தொலைபேசி ஒரு ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் போனாக இருக்க வேண்டும். முதலில் உங்கள் புதிய அல்லது பாவணை செய்கின்ற தொலைபேசியை எதிர்கால நன்மை கருதி முன்னேற்பாடக தயார்படுத்த வேண்டும். அதற்கு பின்வரும் படிமுறைகளை பின்பற்றவும்

1. Settings-> Location & Settings ->அங்கே Remote Controls என்பதில் Tick செய்யவும்.


2. அப்போது உங்கள் Samsung Account Username & Password என்பவற்றை உட்செலுத்த கேட்கும். ஏற்கனவே உங்களுக்குSamsung பயனர் கணக்கு இல்லை எனில் புதிதாக ஒன்றை ஆரம்பிக்கவும்.

3.இப்போது விதிமுறைகள் (Conditions Agreement) பற்றிய பக்கம் காண்பிக்கப்படும். அதில் I agree என்பதை சொடுக்கவும்.

அவ்வளவு தான் இப்போது உங்கள் கையடக்க தொலைபேசி தயாராகி விட்டது. இப்போது உங்கள் தொலைபேசி தொலைந்தாலோ அல்லது உங்கள் வாழ்க்கை துணை,காதலர்,பிள்ளைகள் பாவித்தாலோ அது இருக்கும் இடம். பயணம் செய்த பாதை, அதன் அழைப்பு விபர பட்டியல்(call Logs) மற்றும் ஏராளமான விடயங்களை Track செய்ய முடியும்.

இந்த முகவரிக்கு செல்லவும். அங்கே உங்கள் Samsung Account பயனர் பெயர் மர்றும் கடவுச்சொல் என்பவற்றை கொடுக்கவும். நீங்கள் உங்கள் கையடக்க தொலைபேசியில் கொடுத்த அதே தகவல்களை உட்செலுத்த வேண்டும்.


அங்கே இவ்வாறனான ஒரு முகப்பு பக்கம் உங்களுக்கு தோன்றும். அங்கே உங்கள் கையடக்க தொலைபேசி மாடல் காண்பிக்கப்படும்.


இந்த பக்கத்தில் உங்களுக்கு தேவையான கட்டுபடுத்தும் மற்றும் Track செய்யும் வேலைகளை செய்து கொள்ளமுடியும்

1. Locate My Mobile -      இதை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் கையடக்க தொலைபேசியின் தற்போதைய இருப்பிடம் மற்றும் இறுதி 12 மணி நேரத்தில் உங்கள் தொலைபேசி எங்கெல்லாம் பயணித்த விபரங்கல்ளை வரைபடத்தில் பார்க்கலாம்

2.Lock My Mobile- இதன் மூலம் உங்கள் தொலைபேசியை பயன்படுத்த முடியாதவாறு Lock செய்து கொள்ள முடியும்.

3.Ring My Mobile -உங்கள் மொபைல் சைலன்ட் மோடில் இருந்தால் கூட ரிங் ஆகும்.

4.Call Logs -இறுதி ஒரு வாரம் உங்கள் தொலைபேசியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட மற்றும் உள்வந்த அழைப்புகளின் தகவல்களை பெறலாம்

5. Wipe My Mobile- உங்கள் செமித்து வைக்கப்பட்ட தரவுகள் மற்றும் இலக்கங்கள் என்வற்றை அழிக்க கூடிய Factory Reset / Wipe Delete என்று அழைக்கப்படும் நிரலாக்கலை செய்ய முடியும்.


1 comments:

புகைப்படம் ஒன்றினுள் கோப்பு (File) ஒன்றினை மறைப்பது எவ்வாறு?

10:06 PM , 0 Comments

விண்டோஸ் கணனியில் எமது தனிப்பட்ட கோப்புக்களை ஏனையவர்களிடம் இருந்து மறைத்து வைப்பதற்கு ஏராளமான வழி முறைகள் உள்ளது. 


இருப்பினும் ஒரு புகைப்படத்தினுள் கோப்பு (File) ஒன்றினை மறைத்து வைப்பது என்பது சுவாரஷ்யமான ஒரு விடயம் தானே.

இதோ அதற்கான வழிமுறை.

நீங்களும் புகைப்படம் ஒன்றினுள் கோப்பு ஒன்றினை மறைத்து வைக்க விரும்புகிறீர்களா?

  • நீங்கள் மறைக்க விரும்பும் கோப்பினை ஒரு Zip File ஆக மாற்றிக் கொள்ளுங்கள் (இதற்கு குறிப்பிட்ட கோப்பினை Right Click செய்து 
Send To ===> New ====> Compressed (Zipped) Folder என்பதை சுட்டுக)


  • இனி Jpg, Png போன்ற வடிவங்களில் அமைந்த ஒரு புகைப்படத்தினை தெரிவுசெய்துகொள்க.
  • இனி நீங்கள் Zip செய்த கோப்பினையும் தெரிவு செய்த புகைப்படத்தினையும் C Drive இல் ஒரு கோப்புறையை உருவாக்கி அதனுள் Past செய்க.
  • உதாரணத்திற்கு நீங்கள் C Drive இல் உருவாக்கிய கோப்புறையின் பெயர் Test என்றும், புகைப்படத்தின் பெயர் Image என்றும் உருவாக்கப் பட்ட Zip File இன் பெயர் Text என்றும் வைத்துக் கொள்வோம்.
  • பிறகு Command Prompt ஐ திறந்து CD\ என தட்டச்சு செய்க. பின் உருவாக்கிய கோப்புறையின் பெயர் Test என்பதால் CD Test என தட்டச்சு செய்து Enter அலுத்துக.
  • பின் copy /b என்பதுடன் குறிப்பிட்ட புகைப்படத்தின் பெயரையும் Zip File இன் பெயரையும் தட்டச்சு செய்து மீண்டும் குறிப்பிட்ட புகைப்படத்தின் பெயரை தட்டச்சு செய்து Enter அழுத்த வேண்டும். அவ்வாறு தட்டச்சு செய்தால் அது பின்வருமாறு அமையும்.

copy/b Image.png + Text.zip image.png 


  • மேலே தெரிவு செய்த புகைப்படத்தின் வடிவம் Png என்பதால் மேலே உள்ள வரிகளில் PNG என வந்துள்ளது. நீங்கள் தெரிவு செய்யும் புகைப்படம் எந்த வடிவமோ அந்த வடிவத்தின் குறியீட்டினை அந்த இடத்தில் பிரதி செய்க. (.ico, .jpg, .jpeg, Bmp .... ETC)
மேலுள்ள வரிகளை நீங்கள் சரியாக தட்டச்சு செய்திருந்தால் Enter அலுத்துக.


அவ்வளவுதான். !!! இனி குறிப்பிட்ட புகைப்படத்தினுள் குறிப்பிட்ட கோப்பு மறைக்கப்பட்டு விடும்.

பின் நீங்கள் மறைத்த கோப்பினை குறிப்பிட்ட புகைப்படத்தில் இருந்து பார்க்க Winrar இனை பயன்படுத்தி குறிப்பிட்ட புகைப்படத்தினை திறவுங்கள். அதில் நீங்கள் மறைத்த கோப்பினை அவதானிக்கலாம்.

0 comments:

உலகின் முதல்? டைனோசர் பிறந்துள்ளது, குளோனிங் முறையில்!!!

8:13 AM 0 Comments

இங்கிலாந்தின் லிவர்பூல் ஜோன் மோர் பல்கலைக்கழகத்தினர் வெற்றிகரமான முறையில் டைனோசர் குட்டி ஒன்றை குளோனிங் மூலம் உருவாக்கியுள்ளதாக அந்த பல்கலைக்கழகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த டைனோசர் குட்டிக்கு “ஸ்பெட்” செல்லப் பெயர் சூட்டியுள்ளனர். குளோனிங் முறையில் உருவாக்கப் பட்டுள்ள இந்த டைனோசர் குட்டி பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.

டைனோசரின் மரபணு தீக்கோழி ஒன்றின் கருவில் செலுத்தி விஞ்ஞானிகள் இதனை உருவாக்கியுள்ளனர். பல டைனோசர் மரபணுக்களை செலுத்தி இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதாக உயிரியல் பேராசிரியரான டொக்டர் ஜெரார்ட் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். இவரே இந்த குளோனிங் ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கியவராவார்.

மரபணு மூலம் உருவாக்கப்பட்டுள்ள முதல் குளோனிங் டைனோசர் குட்டியானது மரபணு விஞ்ஞானத்தில் ஒரு மைல் கல்லாகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.




0 comments:

அனைத்து வகையான Dongleகளையும் Unlocking செய்ய - DC Unlocker

8:31 AM 0 Comments

இந்த DC Unlocker மென்பொருளை பயன்படுத்தி Unlocking செய்வது உங்களுக்கு மிக மிக எளிதாக இருக்கும் என நான் நினைக்கிறேன்.

இந்த மென்பொருளை பயன்படுத்தி எப்படி ஒரு Dongle இனை Unlocking செய்வது என்று பார்ப்போம்.என்னிடம் தற்போது இருப்பது ZTE , Dongle (Model : MF100) இதை எப்படி Unlocking செய்வது என்று சொல்லுகிறேன்.

01.இங்கு சென்று DC Unlocker இனை Donwload செய்து கொள்ளுங்கள்.

or

02.DC Unlocker இனை Open செய்து,படத்தை பார்த்து செய்து கொள்ளுங்கள்.


















நேரம் போதாமையால்த்தான் இது பற்றி எந்தவிதமான விளக்கவும் நான் கூறவில்லை!உங்களுக்கு இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் என்னை தொடர்பு கொண்டு கேட்கவும்.

0 comments:

புகைப்படத்தினுள் செய்தி ஒன்றினை மறைப்பது எவ்வாறு? (Tips and Tricks)

8:10 AM 0 Comments

இதற்கு Windows இயங்கு தளத்திலே வசதியுள்ளது.

Windows இல் இருக்கும் Command Prompt இனை பயன்படுத்தி எமது கணனியில் ஏராளமான விடயங்களை செய்யலாம். அந்தவகையில் புகைப்படத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் ஒரு புகைப்படத்தினுள் குறிப்பிட்ட செய்தி ஒன்றினை மறைப்பதற்கும் இதுவே உதவுகின்றது.


இதற்கு உங்கள் கணனியில் இருக்கும் Command Prompt ஐ திறந்து கொள்ளுங்கள்.
(Command Prompt ஐ திறக்க, WinKey+R அழுத்துவதன் மூலம் Run ஐ திறக்கலாம் Run இல் cmd என தட்டச்சு செய்து Enter அலுத்துக.)

குறிப்பிட்ட புகைப்படத்தையும் மறைக்க வேண்டிய செய்தியையும் (Text) ஒரே கோப்பினுள் இட்டு வையுங்கள்.

இனி நீங்கள் மறைக்க வேண்டிய செய்தியையும் புகைப்படத்தையும் Command Prompt மூலம் திறக்க வேண்டும். உதாரணமாக குறிப்பிட்ட கோப்பு Drive D யில் இருப்பின் D: என Command Prompt இல் தட்டச்சு செய்து Enter அழுத்துங்கள். பின் cd என்பதுடன் கோப்பின் பெயரை இட்டு Enter அழுத்துங்கள் உதாரணமாக Drive D இல் இருக்கும் கோப்பின் பெயர் image என இருப்பின் cd image என தட்டச்சு செய்யுங்கள்.

பிறகு copy /b என்பதுடன் புகைப்படத்தின் பெயரையும் நீங்கள் மறைக்க வேண்டிய செய்தி இருக்கும் Text Document இன் பெயரையும் செய்தி மறைக்கப்பட்ட புகைப்படம் வெளிவரவேண்டிய பெயரையும் தட்டச்சு செய்து Enter அலுத்துக. (கீழுள்ளவாறு)

copy /b imagefilename.jpg + textfilename.txt outputimagename.jpg

copy /b புகைப்படத்தின் பெயர்.jpg + செய்தியின் பெயர்.txt செய்தி மறைக்கப்படும் புகைப்படம்.jpg


அவ்வளவு தான் இனி உங்கள் செய்தி குறிப்பிட்ட புகைப்படத்தினுள் மறக்கப்பட்டு விட்டது. மறைக்கப்பட்ட செய்தியை பார்க்க வேண்டுமெனின் குறிப்பிட்ட கோப்பினுள் உருவாக்கப்பட்ட புதிய புகைப்படத்தை Notpad ஒன்றினை திறந்து அதனுள் Drag and Drop செய்து பாருங்கள் Notpad இன் கடைசி வரியில் மறைக்கப்பட்ட செய்தியை காணலாம்.


வருகைக்கு நன்றி!!!

மேலும் பல தகவல்களுக்கு எமது முகநூல் பக்கத்தினூடாக இணைந்திருங்கள்

0 comments:

ஆயுள் முழுதும் எமது தரவுகளை பாதுகாக்க ஒரு வழி.

8:42 AM 0 Comments

ADrive மூலம் நாம் எமது தரவுகளை உலகின் எந்த மூலையில் இருந்தும் அணுகலாம்.

இப்பொழுதெல்லாம் MB, GB ஐ விட்டுவிட்டு TB, ZB பேச வேண்டிய காலம் வந்துவிட்டது. நாம் எமது கணனியின் வன்தட்டை (Hard disk) 20Gb, 40GB என மிகக்குறைந்த கொள்ளவிலேயே பயன்படுத்தி வந்தோம் என்றாலும் அது தற்போது 750GB, 1TB என அதிகரித்து விட்டது.
தரவுகளை சேமிக்க இடப்பற்றாக்குறையின் காரணமாக நாம் 20Gb, 40GB இலிருந்து 750GB, 1TB ஆக அதிகரித்துக்கொன்டாலும் இவ் இரண்டுக்கும் பொதுவான பிரச்சினை ஒன்றுள்ளது. அதாவது ஒருவேலை நமது வன்தட்டு பழுதாகிவிட்டால் அல்லது யாராவது அதனை திருடி விட்டால் அல்லது வேறு காரணங்களால் நமது வன்தட்டிலுள்ள தரவுகளை பெற முடியாவிட்டால் அப்போது என்ன செய்வது. இதற்காகத்தான் உள்ளது Online Drive



நாம் இணையத்தின் ஊடாக எமது தரவுகளை தரவேற்றம் (Upload) செய்வதன் ஊடாக Online Drive இல் எமது தரவுகளை சேமித்துக்கொள்ளலாம்.
Online Drive சேவை வழங்குனர்கள் Google Drive, Sky Drive போன்றன பல இருந்தாலும்ADrive என சற்று வித்தியாசமான ஒரு Online Drive உள்ளது. இது பல சிறப்பான சேவைகளை பயனர்களுக்கு வழங்குகின்றது. இலவசமாக 50Gb இடம் வழங்குவதுடன் கட்டணம் செலுத்தினால் 1000GB வரை இடம் வழங்குகிறது.


பொதுவாக Online Drive களின் சிறப்பம்சங்கள்.

  • நாம் உலகில் எப்பாகத்திலிருந்தும், எந்த நேரத்திலும், எந்த ஒரு சாதனத்திளிருந்தும் (Computer, Mobile, Tablet) எமது தரவுகளை பெறலாம்.
  • மிகவும் பாதுகாப்பாக சேமித்துக்கொள்ள முடிவதுடன் music, videos, photos, documents போன்றவைகளை இலகுவாக பகிர்ந்து கொள்ளவும் முடியும்.
  • நமது வன்தட்டு பழுதாகிவிட்டால் அல்லது யாராவது அதனை திருடி விட்டால் அல்லது வேறு காரணங்களால் நமது வன்தட்டிலுள்ள தரவுகளை நாம் இழந்து விட்டால் எவ்வித கவலையுமின்றி Online Drive மூலம் மீள பெற்றுக்கொள்ளலாம்.
இது தவிர ADrive இற்கு என்றே இருக்கும் தனியான சிறப்பம்சங்கள்.

  • அதிக கொள்ளளவு கொண்ட கோப்புக்களை பகிர்ந்து கொள்ள முடிவதுடன் அதனை ADrive இலிருந்தே E-mail செய்யும் வசதியுமுள்ளது.
  • உங்களது Word, Excel, Powerpoint போன்ற ஆவணங்களை ADrive இல் இருந்த வன்னமே திறக்கலாம், திருத்தலாம் மற்றும் திருத்திய பின் சேமிக்கவும் முடியும்.
  • உங்களது Adrive இல் இருக்கும் ஆவணங்களை உங்களது blog அல்லது website களில் இணைக்கலாம்.
  • நீங்கள் அதிகமான கோப்புக்களை தரவேற்றம் செய்திருந்தால் குறிப்பிட்ட ஒரு கோப்பை அல்லத்து ஆவணத்தை தேடுவது சிரமம் இதற்காக Search Tool தரப்பட்டுள்ளது.
  • தமிழில் அல்லது வேறு எந்த ஒரு மொழியிலும் எமது கோப்புக்களை நிருவகிக்கலாம்.
  • இதனை Android மற்றும் ios சாதனங்கள் மூலம் கையாளலாம்.
மேலும் கட்டணம் செலுத்தி பயன் படுத்தும் போது இதனை விட அதிகமான வசதிகளை வழங்குகின்றது.

  • கட்டணம் செலுத்துவதன் மூலம் 1000GB வரை அதிகரித்துக்கொள்ளலாம்.
  • உங்களது கோப்புக்களை FTP/SSL மூலம் பாதுகாப்பாக கையாளலாம்.
  • உங்களது ஆவணங்கள் கோப்புக்களுக்கான பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்துகின்றது.
  • நேரடியாக ADrive Desktop Application மூலம் உங்களது தரவுகளை அணுகலாம்.
  • உங்களது தரவுகளை நீங்கள் அழித்துவிட்டாலும் ADrive இன் snapshot technology மூலம் அதனை நீங்கள் மீள பெற்றுக்கொள்ளலாம்.
  • ஒரே தடவையில் 16GB அளவுள்ள கோப்பினை தரவேற்றலாம்.
  • ஒரே நேரத்தில் ஒரே உலாவியில் கட்டணம் செலுத்தப்பட்ட 10 வெவ்வேறான கணக்குகளை அணுகலாம்.
  • 24 மணித்தியாலம் 7 நாட்களும் அவர்களின் தொழில்நுட்ப உதவியினை பெறலாம்.
  • 3 ஆம் தரப்பினரின் விரம்பரங்கள் இருக்காது.
  • அத்துடன் நீங்கள் பகிரும் கோப்புக்கள் ஆவணங்களை தன்னியக்க முறையில் நீக்கும் வசதியுள்ளது.
  • ஒரு நிறுவனமாயின் ADrive இல் ஊழியர்களை அனுமதித்து தகவல் தரவு பரிமாற்றத்தை மேட்கொள்ளலாம்.
இங்கு 3 வகையான கணக்குகள் உள்ளது இதில் உங்களுக்கு தேவையான/பொருத்தமான எதையும் தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம்.

  • Personal Premium (14 நாட்களுக்கு இலவசம் பின் கட்டணம் செலுத்தி பயன்படுத்த வேண்டும்.)
  • Business (14 நாட்களுக்கு இலவசம் பின் கட்டணம் செலுத்தி பயன்படுத்த வேண்டும்.)
  • Personal Basic (இது ஆயுள் முழுவதும் இலவசம் என்றாலும் மாதம் $4.92 செலுத்துவதன் மூலம் மேற்கூறப்பட்ட அணைத்து வசதிகளையும் அனுபவிக்கலாம்.ADrive இல் கணக்கை துவங்க : ADrive

0 comments:

I Folder Locker எந்த ஒரு கோப்பையும் மிக வேகமாக Lock செய்கிறது...

8:51 AM 0 Comments

நாம் சில கோப்புக்களை மற்றவர்களுக்கு தெரியாத படி மறைத்து வைப்பதுண்டு.


இதெற்கென Windows இல் Hide எனும் வசதி இருப்பது நாம் அணைவரும் அறிந்ததே இவ்வாறு நாம் Hide செய்யும் போது அது கண்ணுக்கு தெரியாமல் மறைக்கப்பட்டுவிடும் இதனால் நாம் அதனை மீண்டும் தேடுவது சிரமமான ஒரு காரியம்.

இந்த குறைபாட்டை தவிர்க்க உள்ளது ஒரு சிறிய மென்பொருள். இது I_Folder_Locker என அழைக்கப்படுகின்றது. இது எந்த ஒரு கோப்பையும் மிக வேகமாக Lock செய்கிறது. இதனை கணனியில் நிறுவவேண்டிய அவசியமில்லை. நேரடியாக குறிப்பிட்ட மென்பொருளை Double Click செய்வதன் ஊடாக பயன்படுத்தலாம். எது எந்த ஒரு இயங்குதளத்திலும் சிறப்பாக இயங்குகின்றது.

இந்த மென்பொருளை Double Click செய்து Open செய்து கொண்ட பின் நாம் Lock செய்யவேண்டிய கோப்பினை Browse எனும் Button ஊடாக சென்று தெரிவு செய்ய வேண்டும்.

பின் Lock எனும் Button ஐ அழுத்தும் போது நீங்கள் இட விரும்பும் Password ஐ கேட்கும் அதில் 5 சொற்களுக்கு குறையாமலும் 15 சொற்களுக்கு கூடாமலும் ஒரு Password இட வேண்டும் அவ்வளவுதான் உங்களது கோப்பு Lock ஆகிவிடும்.
பின் unlock செய்ய Unlock எனும் button ஐ Click செய்வதன் மூலம் Password ஐ கொடுத்து Unlock செய்துகொள்ளலாம்.

இதனை தரவிறக்க கீழுள்ள இணைப்பை Click செய்யவும்.

0 comments:

200 க்கும் மேற்பட்ட Format களில் Video வினை Convert செய்யும் கட்டண மென்பொருளுக்கு ஈடான ஒரு இலவச மென்பொருள்...

8:38 AM 0 Comments

Freemake Video Converter எனும் Video Converter அதிகமானோர் அறிந்திராத ஒரு மென்பொருள்.

இது எமது Video க்களின் Format இனை மாற்ற உதவுகிறது. Video க்களின் Format இனை மாற்ற எத்தனையோ மென்பொருள்கள் இருந்த போதும். இந்த Freemake Video Converter எனும் மென்பொருளின் சேவை சிறப்பானது.

  • இது இலவசம் என்பதுடன் எவ்வித கட்டுப்பாடுகளுமற்ற பயனைத்தருகின்றது.
  • இது கட்டணம் செலுத்தி பெறப்படும் மென்பொருளுக்கு நிகரான சேவையை பயனர்களுக்கு வழங்குகின்றது.
  • மிகவும் வேகமாக செயற்படுவதுடன் இலகுவில் அணைவராலும் பயன்படுத்தும் வகையில் இடைமுகத்தை கொண்டுள்ளது.
  • இந்த மென்பொருள் AVI, MP4, WMV, MKV, 3GP, DVD, MP3, iPad, iPhone, PSP, Android phones. Video to MP3 போன்றவைகள் உட்பட 200 க்கும் மேற்பட்ட Format களில் Video வினை Convert செய்கிறது.
  • அத்துடன் DVD இல் இருக்கும் Video வினை பிரிக்க (Rip) முடிவதுடன் CD ஒன்றுக்கு Burn செய்வதற்கும் உதவுகின்றது.
  • இணையத்தில் இருக்கும் Video ஒன்றின் URL இனை இந்த மென்பொருளில் Past செய்வதன் மூலம் அதனை நேரடியாக MP3 Format இற்கு மாற்றிக்கொள்ளலாம்.
  • Blue-Ray Format இற்கு Convert செய்ய முடிவதுடன் அதனை உயர் தரத்தில் Blue-ray Disk இற்கு சேமித்துக்கொள்ளவும் முடியும்.
  • தொடர்ந்து 40 மணித்தியாலம் வரை Video இணை Burn செய்ய முடியும். (புதிய வசதி)
  • இதன் மூலம் உங்களது Video களினை Youtube இற்கு தரவேற்றம் செய்யலாம். (புதிய வசதி)
  • புகைப்படங்களை ஒன்றிணைத்து Slideshows ஒன்றினை உருவாக்க முடியும்.
  • அத்துடன் பல்வேறுபட்ட Video க்களினை ஒன்றிணைக்க முடிவதுடன் Video க்களின் அளவினையும் வரையறை செய்யலாம்.

மேலும் பல வசதிகளுடன் இதன் புதிய பதிப்பு கிடைக்கின்றது இந்த அருமையான மென்பொருளை கீழுள்ள இணைப்பின் மூலம் தரவிறக்கலாம்.

Free make Video Converter (Online Setup)

 OR

Free make Video Converter (Offline Setup)

உதவிகள் தேவைப்படின் கீழுள்ள Comment box இல் தெரிவியுங்கள்.

0 comments:

Right Click Context Menu ஊடாக Image Resize செய்ய இலகுவான ஒரு மென்பொருள்.

5:53 PM 0 Comments

இது image இனை Re size செய்வதற்கு ஒரு இலகுவான வழிமுறையாகும்.
நாம் சில வேலைகளில் எமது புகைப்படங்களின் அளவை மாற்றுவதற்கு மென்பொருள் தேடி களைத்து விடுவதும் உண்டு. அதற்காக இப்போது இருக்கிறது தீர்வு. "Image Re sizer" எனப்படக்கூடிய சிறிய ஒரு மென் பொருள் இதனை நாம் கணனியில் நிறுவி விட்டால் போதும். பிறகு நாம் எந்த ஒரு image இனை Right Click செய்யும் போதும் Context menu இல் Re size Pictures எனும் ஒரு option காணப்படும். பிறகு நமக்கு தேவையான அளவில் எமது image களை Re size செய்து கொள்ளலாம்.


இது image இனை Resize செய்வதற்கு ஒரு இலகுவான வழிமுறையாகும்.
பயன்படுத்துவது மிகவும் இலகு.

அத்துடன் இந்த Image Resizer tool இல் பொதுவான அளவுகளும் தரப்பட்டுள்ளது. உதாரணமாக "854x480", "1366x768", "1920x1080" போன்றன. இது நமது வேலையினை மேலும் இலகுவாக்கின்றது. இதுவல்லாமல் நீங்கள் வேறு அளவுகளில் Resize செய்ய வேண்டுமாயின் Custom எனும் தெரிவின் மூலம் வேறு அளவுகளில் மாற்றிக்கொள்ளவும் முடியும்.


இதனை தரவிக்க கீழுள்ள சுட்டியினை செடுக்கவும்.

Download Free Image Resizer

உடனுக்குடன் எனது தகவல்களை அறிய எமது facebook page இல் இணைந்திருங்கள்.

0 comments:

வன்தட்டில் (Hard Disk) எந்த வகையான கோப்பு எந்த அளவில் உள்ளது என்பதனை துல்லியமாக காட்டும் மென்பொருள்

8:36 AM , 0 Comments

எமது வன்தட்டில் ஏராளமான கோப்புக்கள் குவிந்து கிடக்கின்றன எந்த வகையான கோப்பு எந்த அளவில் உள்ளது என்பது எமக்குத்தெரியாது. சிலவேளைகளில் ஒரே வகையான கோப்புக்களை பல இடங்களில் சேமித்து வைத்திருப்போம். இதனால் வன்தட்டில் இடப்பற்றாக்குறையும் ஏற்படும்.


எமது வன்தட்டில் எந்த வகையான கோப்பு எந்த அளவில் உள்ளது என்பதனை "WinDirStat" எனும் மென்பொருள் துல்லியமாக காட்டுகின்றது. இது வெறும் எண்கள் எழுத்துக்களில் மட்டுமல்லாமல் Graphics வடிவிலும் படம் பிடித்துக்காட்டுகின்றது. இதன் மூலம் உங்கள் கணனியில் இருக்கும் மிகப்பெரிய கோப்பு தொடக்கம் மிகச்சிறிய கோப்பு வரை மிக இலகுவில் அடையாளம் கண்டு கொள்ளலாம்.

அத்துடன் தேவையற்ற மென்பொருட்களை தானியக்க முறையில் அழித்து கொள்ளவும் அழிக்க முடியாத கோப்புக்களை மிக இலகுவில் அழித்து கொள்ளவும் இதுவழிவகுக்கின்றது.

மேலும் நீங்கள் Scan செய்ய விரும்பும் வன்தட்டின் ஒரு பிரிவை அல்லது பலபிரிவை தேர்ந்தெடுத்து Scan செய்யும்வசதியை கொண்டுள்ளதுடன் ஒரு தனித்த கோப்பில் உள்ளவற்றினையும்சோதித்தறியஉதவுகின்றது.

இதன் மூலம் Scan செய்த பின் இறுதி விளைவை Tree Pane மூலம் காட்டுகின்றது. மேலும் கோப்புக்களின் வகையினை பட்டியலிட்டு காட்டுவதுடன் அது எந்த அளவில் இடம் பிடித்திரிக்கின்றது என்பதனையும் துல்லியமாக காட்டுகின்றது.

இன்னும் பல வசதிகளுடன் இந்த மென்பொருள் இலவசமாகவே கிடைக்கின்றது இதனை கீழுள்ள இணைப்பின் மூலம் தரவிறக்கலாம்.

1Mb இற்கும் குறைந்த அளவுடைய இந்த மென்பொருளை நீங்களும் தரவிறக்கி பயன்படுத்த விரும்பினால் கீழுள்ள இணைப்பில் செல்க.


மேலும் பல சுவையான சுவாரஷ்யமான தொழில்நுட்ப தகவல்களுக்கு எமது முகநூல்பக்கத்தினூடாக இணைந்திருங்கள்.

நன்றி

0 comments:

ஒரே மென்பொருள் மூலம் 80 இற்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையினை கொண்ட கோப்புக்களை திறக்கலாம்.

8:25 AM 0 Comments

அன்றாடம் கணணியை பயன்படுத்தும் நாம் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்ய பல்வேறுபட்ட மென்பொருட்களை பயன் படுத்துகின்றோம். இவ்வாறு பயன்படுத்தி உருவாக்கப்படும் ஆவணங்கள், கோப்புக்கள், புகைப்படங்கள், காணொளிகள், போன்றன பல்வேறு Extension ஆல் உருவாக்கப்பட்டு சேமிக்கப்படும் உதாரணமாக MS Word இல் ஒரு ஆவணத்தை தயார் செய்து சேமிப்போம் எனின் அது DOC அல்லது DOCX எனும் Extension கொண்டு சேமிக்கப்படும். Windows Movie Maker ஐ கொண்டு ஒரு வீடியோ இனை உருவாக்கி சேமிப்போம் எனின் அது Mp4 அல்லது WMV போன்ற Extension கொண்டு சேமிக்கப்படும்.


இவ்வாறு உருவாக்கிய கோப்புக்களை இன்னுமொரு சந்தர்பத்தில் பயன்படுத்த வேண்டுமெனின் குறிப்பிட்ட அந்த மென்பொருளை நாட வேண்டும். ஒருவேளை அது கணனியில் நிறுவப்பட்டிருக்காவிட்டால் அதனை அதனை மீண்டும் நிறுவிய பின் தான் அந்த கோப்பை திறக்க முடியும்.

குறிப்பிட்ட ஒரு மென்பொருளை நிறுவுவதன் மூலம் இவ்வாறான சிக்கல்களினை தீர்த்துக்கொள்ள முடியும். இதற்கென தனியாக ஒரு மென்பொருள் உள்ளது. இது Free Opener ஆகும். இதன்மூலம் 80 இற்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையினை கொண்ட ஆவணங்கள், கோப்புக்கள், புகைப்படங்கள், காணொளிகள் போன்றவற்றினை திறக்கலாம்.

இதனை கொண்டு பின்வரும் கோப்பு வகைகளினை திறக்கலாம்...

Code Files (.vb, .c, .cs, .java, .js, .php, .sql, .css, .aspx, .asp)
Web Pages (.htm, .html)
Photoshop Documents (.psd)
Images (.bmp, .gif, .jpg, .jpeg, .png, .tif, .tiff)
XML Files (.resx, .xml)
PowerPoint® Presentations (.ppt, .pptx, .pps)
Media (.avi, .flv, .mid, .mkv, .mp3, .mp4, .mpeg, .mpg, .mov, .wav, .wmv, .3gp, .flac)
Microsoft® Word Documents (.doc, .docx)
SRT Subtitles (.srt)
RAW Images (.arw, .cf2, .cr2, .crw, .dng, .erf, .mef, .mrw, .nef, .orf, .pef, .raf, .raw, .sr2, .x3f)
Icons (.ico)
Open XML Paper (.xps)
Torrent (.torrent)
Flash Animation (.swf)
Archives (.7z, .gz, .jar, .rar, .tar, .tgz, .zip)
Rich Text Format (.rtf)
Text Files (.bat, .cfg, .ini, .log, .reg, .txt)
Apple Pages (.pages)
Microsoft® Excel Documents (.xls, .xlsm, .xlsx)
Comma-Delimited (.csv)
Outlook Messages (.msg)
PDF Documents (.pdf)
vCard Files (.vcf)
EML Files (.eml)

இந்த மென்பொருள் முற்றிலும் இலவசம் என்பதுடன் இதில் எந்த வித Male ware தொகுப்புகளும் இல்லை என்பதனை Norton மற்றும் Mcafee உறுதிப்படுத்தியுள்ளது.

இதனை கீழுள்ள இணைப்பின் மூலம் தரவிறக்கிக்கொள்ளலாம்.

0 comments:

தொல்லைகள் மறந்து ஒரு சில நிமிடம் ஓய்வெடுக்க உதவும் அழகிய இணைய தளங்கள்.

4:46 PM 0 Comments

இன்று ஒரு தனி மனிதனால் செய்ய முடியாத கற்பனைக்கு எட்டாத பல காரியங்களையும் கணணியை பயன் படுத்தி சில நொடிப் பொழுதுகளில் செய்து முடிக்க முடியுமென்றால் அதனை மறுப்பதற்கில்லை.

எனவே இன்று வீட்டுக்கு வீடு நிறுவனத்துக்கு நிறுவனம் என கணணி தனது ஆதிக்கத்தை செலுத்திவிட்ட இன்றைய நிலையில் கணணியை பயன்படுத்தாதோர் யார் தான் இருக்க முடியும்.

எது எப்படியோ குறிப்பிட்ட ஒரே செயல்பாட்டில் நாம் தொடர்ந்து ஈடுபடுவதானால் சலிப்பு, களைப்பு ஏற்படுவதென்பது மனித இயல்பல்லவா? எனவே நாம் கணணியை தொடர்ந்து பயன்படுத்துகையில் ஏற்படும் சலிப்பை சமாளிக்க பின்வரும் தளங்கள் உங்களுக்காக உதவுகின்றது.

============> Calm


இது Calm எனும் தளமாகும் நீங்கள் இந்த தளத்துக்கு பிரவேசித்தவுடன் நீங்கள் இளைப்பார வேண்டிய நேர அளவை தேர்ந்தெடுக்க வேண்டியது தான் 2 நிமிடம், 5 நிமிடம், 10 நிமிடம் என இங்கு நேர அளவுகள் இருக்கின்றன.

============> Silk


இது Silk எனும் தளம் இது கருப்பு நிற பின்புலத்தினை கொண்டுள்ளது. இதில் நீங்கள் கீறும் வடிவங்கள் சமச்சீராக இருபக்கங்களிலும் தோன்றுவதுடன் பின்புல ஒலியையும் கேட்க முடிகிறது.

============> Line 3D


Line 3D எனப்படும் இந்த தளத்தில் 3D Bar களை அவதானிக்கலாம். உங்கள் களைப்பு நீங்கும் வரையில் அவற்றினை விருப்பம் போல் வலைத்துக் கொள்ளுங்கள்.

============> Rain For Me


கடும் வெயில் காலாமா? மலையோசையை கேட்கவே ஆசையாக இருக்கின்றதா? அப்படியெனின் இதோ உங்களுக்காக Rain For Me எனும் தளம் உதவுகின்றது.

============> Into Time


Into Time எனப்படும் இந்த தளம் பல அருமையான நிறங்களை மாறி மாறி தோன்றச் செய்கின்றது. அதன் மேல் Clik செய்து பாருங்கள் ஏராளமான நிறங்களை கொண்ட கட்டங்கள் உருவாகுவதனை அவதானிக்கலாம்.

============> Falling Falling


இது Falling Falling என அழைக்கப்படுகின்றது. இந்த தளத்துக்கு விஜயம் செய்து பாருங்கள் ஒரு வடிவிலான பல உருவங்கள் தொடர்ச்சியாக கீழே விழுவதாய் உணர முடிவதுடன் அதற்கேற்றவாரான ஒலி பின்புலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

============> Tone Matrix


Tone Matrix எனும் இந்த தளத்தில் ஏராளமான சிறிய கட்டங்கள் தரப்பட்டுள்ளது. இதில் சில புள்ளிகளை ஏற்படுத்துவதன் மூலமோ அல்லது கோடுகள் வரைவதன் மூலமோ அதற்கேற்ற தாளத்தினை கேட்க முடியும்.

============> Do Nothing For 2 Minutes.


Mouse, keyboard ஐ கூட பிடிக்க வேண்டாம் 2 நிமிடம் சும்மா இருந்தால் மட்டும் போதும் என அழைக்கிறது இதோ இந்த தளம் Do Nothing For 2 Minutes.

0 comments: